331 ரன்கள் டார்கெட் கொடுத்த நியூசிலாந்து: தடுமாறி வரும் வங்கதேசம்

Last Modified புதன், 20 பிப்ரவரி 2019 (08:44 IST)
வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இன்று தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி வங்கதேச பந்துவீச்சாளர்களின் பந்துகளை துவம்சம் செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 330 ரன்கள் குவித்தது. டெய்லர் 69 ரன்களும், நிக்கோல்ஸ் 64 ரன்க்ளும், லாத்தம் 59 ரன்களும் அடித்தனர். கிராந்தோம் அதிரடியாக 15 பந்துகளில் 37 ரன்கள் அடித்தார்.


இந்த நிலையில் 331 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் வங்கதேசம் சற்றுமுன் வரை 11 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 51 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இன்னும் 39 ஓவர்களில் அந்த அணி 280 ரன்கள் எடுக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :