Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பெண்கள் சர்ச்சையில் சிக்கிய வீரர்: விக்கெட் கீப்பரை அடிக்க முயற்சி, மைதனத்தில் பரபரப்பு!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 2 டிசம்பர் 2016 (11:38 IST)
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போல் வங்காள தேசத்தில் பி.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. 

 
 
ரங்க்பூர் ரைடர்ஸ் அணியும் ராஜ்ஷகி கிங்ஸ் அணியும் மோதிய போட்டியின் போது, வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான் எதிரணி விக்கெட் கீப்பரை பேட்டால் அடிக்க முயன்றதால் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
ராஜ்ஷகி அணியின் பேட்ஸ்மேனாக களத்தில் இருந்த சபீர் ரஹ்மான் திடீரென்று எதிரணியின் விக்கெட் கீப்பரான, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மொகமத் சாசாத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 
வாக்குவாதத்தின் போது சபீர் ரஹ்மான் தான் கையில் வைத்திருந்த பேட்டை சாகாத்தை அடிப்பது போல் உயர்த்தினார். சக வீரர்கள் வந்து சபீர் ரஹ்மான தடுத்தனர். இதனால் போட்டியின் போது பரபரப்பு ஏற்பட்டது. 
 
முன்னதாக சபீர் ரஹ்மான் ஓட்டல் அறையில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக கூறி அவருக்கு பி.சி.பி கடும் அபாரதம் விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :