வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (20:12 IST)

அஸ்லான் ஷா ஹாக்கி: 5-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை துவைத்தெடுத்தது இந்தியா

மலேசியாவின் இபோக் நகரில் 25-வது சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியுடன் மோதிய இந்தியா 5-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.


 
 
முன்னதாக இந்திய அணி இந்த தொடரில் ஜப்பான், கனடா ஆகிய அணிகளை வீழ்த்தியிருந்தது. ஆஸ்திரேலிய அணியிடன் மோசமான தோல்வியையும் சந்தித்திருந்த இந்தியா 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்தது. இதனால் எஞ்சியுள்ள ஆட்டங்களில் வெற்றி பெற்றால் தான் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்துடன் பாகிஸ்தானுடன் இன்று களமிறங்கியது.
 
மிகவும் சுறுசுறுப்பான ஆட்டத்தை இன்று வெளிப்படுத்திய இந்திய அணி ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் கோல் அடித்தது. முதல் பாதியில் இந்திய அணி 2 கோலும், பாகிஸ்தான் அணி 1 கோலும் அடித்திருந்தது.
 
இரண்டாவது பாதியில் இந்தியாவின் நேர்த்தியான ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி தடுப்பாட்டத்திலேயே கவனம் செலுத்தியது. இதனை சாதகமாக பயன்படுத்திய இந்திய அணி வீரர்கள் அவர்களின் தடுப்பாட்டத்தை சாதூர்யமாக தகர்த்து மேலும் 3 கோல் அடித்தது. இதன் மூலம் இந்திய அணி 5-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
 
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.