அரையிறுதியில் ஆஸ்திரேலியா: 4வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா


sivalingam| Last Modified புதன், 12 ஜூலை 2017 (22:00 IST)
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியை வென்று அரையிறுதியை ஆஸ்திரேலிய அணி உறுதி செய்துள்ளது.


 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா பி.ஜி.ராட் அடித்த அபார சதத்தால் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது.
 
வெற்றி பெற தேவையான 227 ரன்களை ஆஸ்திரேலிய அணி 45.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து எடுத்ததால் 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்த வெற்றியால் ஆஸ்திரேலியா அரையிறுதியை உறுதி செய்தது. ஏற்கனவே இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டியின் தோல்வியால் இந்திய அணி தற்போது 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :