Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 451 ரன்களுக்கு ஆல் அவுட்!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 17 மார்ச் 2017 (16:08 IST)
இந்தியா வந்துள்ள கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 

 
 
இதில் புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் பெங்களூருவில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதையடுத்து இந்த தொடர் தற்போது சமநிலையில் இருக்கிறது.
 
இந்நிலையில் இரு அணிகளிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 299 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா. 
 
இதையடுத்து இன்று காலை துவங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து பேட்டிங் செய்தது. 
 
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 451 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 
 
இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்களையும், உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்களையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.


இதில் மேலும் படிக்கவும் :