வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (16:06 IST)

கிரிக்கெட் பயிற்சியாளர் மீது தாக்குதல்... கம்பீர் கண்டனம்

டெல்லியில் கிரிக்கெட் பயிற்சியாளர் தேர்வுக்குழு தலைவர் அமித் பண்டரி. இவர்  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். விரைவில் சையத் முஸ்டாக் அலி கோப்பை டி 20 தொடர் நடக்க இருக்கிறது.
இந்நிலையில் 23 வயதுகுட்பட டெல்லி அணி வீரர்கள் தேர்வுக்கு 33 வீரர்கள் வந்திருந்தனர்.அவர்களுக்கு டெல்லி ஸ்டீபன்ஸ் கல்லூரி வளாகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதை அனித் பண்டாரி மற்றும் டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பார்த்துக்கொண்டிருந்தனர்.
 
இதனையடுத்து 8 பேர் கொண்ட கும்பல் மைதானத்துக்குள் புகுந்து அமித்  பண்டாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கையில்  வைத்திருந்த கம்பி,கிரிக்கெட் மட்டையால் பலமாக தாக்கினர்.அவ்விடத்திலேயே பண்டாரி கீழே சரிந்தார்.பின்னர்  மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுசம்பந்தமாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் 23 வயதுக்குட்பட்ட அணி தேர்வில் அனுஜ் தேடா  என்பவர் தேர்வு செய்யப்படாததால், ஆத்திரத்தில் ஒரு கும்பலை ஏற்பாடு செய்து பண்டாரி மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
 
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் டுவிட்டரில் கூறிதாவது;
 
'தலைநகரில் நடந்த இந்த சம்பவத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைவருக்கும் உடனடியாக தண்டனை அளிக்கப்பட வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார். '