வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 26 செப்டம்பர் 2014 (13:40 IST)

ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

17 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் தென்கொரியாவில் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு பதக்கம் கிட்டியுள்ளது.
 
செப், 25 நேற்றைய நிலவரப்படி 15 பதக்கங்களை பெற்றிருந்தது நம் இந்திய அணி. இந்நிலையில் செப், 26 (இன்று) துப்பாக்கி சுடுதலில் இந்தியா தனது 2 ஆவது வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது.

ஆண்கள் அணிகளுக்கான 25 மீட்டர் சென்டர் பியர் பிஸ்டல் போட்டியில் குர்பீத்சிங், தமாங், விஜய குமார் ஆகியோரை கொண்ட இந்திய அணி பங்கேற்றது.
 
இதில் இந்தியா வெள்ளி பதக்கத்தை வென்றது. துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியா 8 பதக்கங்களை (1 தங்கம், 1 வெள்ளி, 6 வெண்கலம்) பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு. மேலும் ஸ்குவாஷ் போட்டியில் பெண்கள் பிரிவில் அரை இறுதி போட்டியில் இந்தியா– தென்கொரியா அணிகள் மோதின.

இதில் ஒற்றையர் பிரிவில் ஜோஸ்னா சின்னப்பா கொரியா வீராங்கனை பார்க்கை தோற்கடித்தார். பின்னர், அடுத்த ஆட்டத்தில் தீபிகா பல்லிகல் 11–4, 11–5, 8–11, 11–5 என்ற நேர் செட்டில் சூன்மியை வீழ்த்தினார்.
 
இதனால் 2–0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆசிய விளையாட்டில் இந்திய பெண்கள் அணிக்கு வெள்ளி பதக்கமாவது கிடைப்பது உறுதி ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.