1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 10 ஜூலை 2017 (17:14 IST)

1 மணி நேரத்தில் கைமாறிய தங்கம் பதக்கம்; இந்திய வீராங்கனை ஏமாற்றம்

ஆசிய தடகள் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை அர்ச்சனாவை ஆசிய தடகள போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி தகுதி நீக்கம் செய்து பதக்கத்தை பறித்தது.


 

 
ஆசிய தடகள போட்டியில் இந்தியா தங்க பதக்கத்தில் முதலிடத்தில் இருக்கும் நிலையில் ஒரு தங்கம் குறைந்தது. பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை அர்ச்சனா ஆதவ் 2 நிமிடம் 2 வினாடிகளில் இலக்கை கடந்து தங்க பதக்கம் வென்றார். ஆனால் அடுத்த 1 மணி நேரத்திலே ஆசிய தடகள போட்டி ஒருங்கிணைப்பு குழு அவரை தகுதி நீக்கம் செய்தது. இதனால் அவரது தங்க பதக்கம் பறிக்கப்பட்டது.
 
இதற்கு காரணம் இடண்டாவது வந்த இலங்கை வீராங்கனை நிமாலி வாலிவர்ஷா. இலக்கை நோக்கி ஓடிய போது அவரை முந்தக்கூடாது என்பதற்காக அர்ச்சனா வேண்டுமென்றே வழியைமறித்து இடையூறு செய்தார் என இலங்கை வீராங்கனை புகார் அளித்தார். 
 
அதைத்தொடர்ந்து ஆசிய தடகள போட்டி ஒருங்கிணைப்பு குழு வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தது. அதில் அவர் அளித்த புகாரில் உண்மை இருப்பதாக கருதி ஒருங்கிணைப்பு குழு அர்ச்சனாவை தகுதி நீக்கம் செய்தது. இதையடுத்து தங்க பதக்கம் நிமாலிக்கு வழங்கப்பட்டது.