Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தோனிக்கு கோலி ஒன்றும் சளைத்தவர் அல்ல: அஷ்வின் பேட்டி!!


Sugapriya Prakash| Last Modified சனி, 7 ஜனவரி 2017 (12:36 IST)
சரியான நேரத்தில் தோனி கேப்டன் பதவில் இருந்து விலகியுள்ளார். இவருடன் ஒப்பிடுகையில், கோலி எந்த விதத்திலும் சளைத்தவர் இல்லை என அஷ்வின் தெரிவித்துள்ளார்.

 
 
இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், தோனி வளர்த்து விட்ட வீரர் இருப்பினும் இருவரின் உறவில் சமீபகாலமாக விரிசல் ஏற்பட்டுள்ளது. 
 
ஐ.சி.சி., டெஸ்ட், சிறந்த வீரர் விருதுக்கு தேர்வான போதும் அஷ்வின், தோனிக்கு நன்றி சொல்ல மறந்ததுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
 
இந்நிலையில், தோனியின் விலகல் குறித்து அஷ்வின் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கேப்டனாக தோனியின் செயல்பாடு மிகவும் சிறப்பானது. இவரின் சாதனைகளை எட்டுவது மிகவும் கடினம். தோனி சரியான நேரத்தில் கேப்டன் பதவியை கோலிக்கு அளித்துள்ளார். தோனியுடன் ஒப்பிடுகையில், கோலி திறமையில் சளைத்தவர் இல்லை என தெரிவித்துள்ளார்.
 
மேலும், தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியது அவரது தனிப்பட்ட முடிவு, அதில் நான் கருத்து கூற முடியாது, ஆனால் இந்த முடிவு வருத்தமளிக்கிறது என அஷ்வின் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :