Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஷ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு ஓய்வு அவசியமா? அசாருதீன் கேள்வி!!


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (21:25 IST)
இந்திய அணியின் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர்கள் அஷ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு ஓய்வளித்துள்ளது அவசியமா என அசாருதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. 
 
இந்நிலையில், ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருவருக்கும் இலங்கை தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டது. 
 
இது குறித்து முன்னாள் கேப்டன் அசாருதீன் கேள்வி எழுப்பி உள்ளார். அவர் கூறியதாவது, ஆஸ்திரேலியா போன்ற சிறந்த அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது சரியான முடிவு அல்ல. இலங்கைக்கு எதிரான போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஓய்வு அவசியமா? என கேட்டுள்ளார். 
 
மேலும், சுழற்பந்து வீரர்களாக உள்ளூர் மைதானத்தில் அவர்களது பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். ஆஸ்திரேலிய தொடரில் இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :