Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

45 வது போட்டியில் அதிவேக 250 விக்கெட்: அஸ்வின் மகிழ்ச்சி!!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 13 பிப்ரவரி 2017 (12:50 IST)
வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணியின் சுழற்பந்து வீரரான அஸ்வின் 45-வது டெஸ்டில் 250 விக்கெட்டை எடுத்து அதிவேகத்தில் எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார். 

 
 
இதற்கு முன்பு ஆஸ்திரேலிய வீரர் டென்னிஸ் லில்பி 49 டெஸ்டில் 250 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருந்தது. இதனை அஷ்வின் முறியடித்துள்ளார்.
 
இது குறித்து அஷ்வின் கூறியதாவது, அதிவேகத்தில் 250 விக்கெட் கைப்பற்றி சாதனை புரிந்ததை நான் சிறந்ததாக கருதுகிறேன். எனது சிறந்த சாதனைகளில் ஒன்றாக நினைக்கிறேன் என தெரிவித்தார்.
 
மேலும், 250 விக்கெட்டை கைப்பற்றிய 6-வது இந்தியர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். முந்தைய வீரர்களான அனில் கும்ப்ளே 619 விக்கெட் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். கபில்தேவ் (434 விக்கெட்), ஹர்பஜன் சிங் (417 விக்கெட்), ஜாகீர்கான் (311 விக்கெட்), பி‌ஷன்சிங் பெடி (266 விக்கெட்) கைப்பற்றி உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :