வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 17 டிசம்பர் 2014 (15:36 IST)

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி விளையாட தடை

குத்துச்சண்டைப் போட்டிகளில் விளையாட, இந்திய வீராங்கனை சரிதா தேவிக்கு சர்வதேச குத்துச்சண்டை சங்கம் ஓராண்டு தடை விதித்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான சரிதா தேவி, அரையிறுதியில் தென் கொரிய வீராங்கனை ஜினா பார்க்குடன் மோதினார். ஆனால், அரை இறுதியில் தென் கொரிய வீராங்கனை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
 
சிறப்பாக செயல்பட்டபோதும் தோற்றதாக அறிவிக்கப்பட்டதால் சரிதா கடும் அதிருப்தி அடைந்தார். இதனிடையே, நடுவர்களின் முடிவை எதிர்த்து இந்தியக் குழு முறையிட்டது. ஆனால், இந்த முறையீட்டு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
 
குத்துச்சண்டை பதக்கம் அணிவிக்கும் விழாவில் இந்தியா வீராங்கனை சரிதா தேவி கண்ணீர் விட்டு அழுததோடு, வெண்கலப் பதக்கத்தை கழுத்தில் அணியாமல், கையில் வாங்கிக் கொண்டார்.
 
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குத்துச்சண்டைப் போட்டிகளில் விளையாட சரிதா தேவிக்கு சர்வதேச குத்துச்சண்டை சங்கம் ஓராண்டு தடை விதித்துள்ளது.