வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 18 ஜூன் 2016 (05:05 IST)

36 ஆண்டுகளுக்கு பிறகு ஆக்கியில் சாதனை படைத்த இந்திய

36 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஆக்கி போட்டி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இந்தியா சாதனை படைத்தது


 

 
இந்தியா, கிரேட் பிரிட்டன், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், தென் கொரிய ஆக்கி அணிகள் பங்கேற்ற சாம்பியன்ஸ் டிராபி ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில், இந்திய அணி 7 புள்ளிகளுடனும், இங்கிலாந்து 5 புள்ளிகளுடனும், பெல்ஜியம் 4 புள்ளிகளுடனும் இருந்தது. 
 
இந்நிலையில், இங்கிலாந்து-பெல்ஜியம் இடையிலான லீக் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதையடுத்து, இந்திய ஆக்கி அணி 36 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது.
 
இதற்கு முன்பாக கடந்த 1982-ல் ஆம்ஸ்டர்டாமில் நடந்த போட்டியில் வெண்கலம் வென்றதே இந்திய அணியின் சாதனையாக இருந்தது.