6 பந்துகளில் 6 விக்கெட்; அத்தனையும் கிளீன் போல்ட்: அசத்தும் சிறுவன்!!


Sugapriya Prakash| Last Updated: சனி, 12 ஆகஸ்ட் 2017 (21:04 IST)
இங்கிலாந்தில் நடந்த கிரிக்கெட் போட்டி ஒன்றில் 6 பந்துகளில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி 13 வயதேயான லூக் ராபின்சன் சாதனை படைத்துள்ளான்.

 
 
இங்கிலாந்தின் வட கிழக்கில், ஃபிலடில்பியா கிரிக்கெட் கிளப் சார்பில் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.
 
இந்த போட்டியில் லூக் ராபின்சன் என்ற சிறுவன் 6 பந்துகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் சிறப்பு என்னவெனில் அனைத்து விக்கெட்டுகளும் கிளீன் போல்டு என்பதாகும்.
 
ஃபிலடில்பியா கிளப்பின் 149 ஆண்டுகால வரலாற்றில் இப்படி ஒரே ஓவரில் 6 விக்கெட்களை, அதுவும் கிளீன் போல்டாக வீழ்த்தியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :