மீண்டும் வெற்றிப் பாதையில் இவானோவிச்

Webdunia| Last Modified செவ்வாய், 10 ஆகஸ்ட் 2010 (17:12 IST)
சமீபமாக கடும் தோல்விகளைச் சந்தித்து வந்த செர்பிய முன்னாள் உலக நம்பர் 1 வீராங்கனை அனா இவானோவிச், சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் முதல் சுற்றில் விக்டோரியா அசரென்காவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

போலந்து வீராங்கனை அசரென்காவை 2-6, 7-6, 6-2 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார் இவானோவிச்.

2008ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஒபன் சாம்பியன் பட்டம் வென்று தரவரிசையில் முதலிடம் வகித்த இவனோவிச் அதன் பிறகு தொடர் தோல்விகளால் தரவரிசையில் மடமடவென சரிந்து 62-வது இடத்திற்கு வீழ்ந்தார்.

ரஷ்ய வீராங்கனை தினாரா சஃபீனாவும் இரண்டாவது சுற்றுக்கு எளிதில் முன்னேறினார்.
இஸ்ரேல் வீராங்கனை ஷாஹர் பியர், பிரான்ஸ் வீராங்கனை பர்டோலி ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :