வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. கட்டுரைகள்
Written By Webdunia

தோனி இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது - இயன் சாப்பல்!

ஒரு டெஸ்ட் கேப்டனாக கிரிக்கெட் உலகில் இவ்வளவு விவாதங்களுக்கு இடமளித்திருப்பவர் சமீப காலங்களில் இந்திய கேப்டன் தோனி அளவுக்கு ஒருவரும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார் ஆஸ்ட்ரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல்!
FILE

இது குறித்து பிரபல கிரிக்கெட் இணையதளத்தில் அவர் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது:

குறுகிய வடிவத்தில் தோனி அபார கேப்டன், மிடில் ஆர்டரில் இறங்கி போட்டியை இந்தியாவின் வெற்றியாக மாற்றக்கூடிய அபூர்வத் திற்மை படைத்தவர் என்பதில் ஐயமில்லை.

ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவரது உத்திகள் பிற்போக்குத் தனமாக உள்ளது. இதனால் எதிரணியினரில் சாதாரண பேட்ஸ்மென்கள் கூட ரன்களை குவிக்க நேரிடுகிறது. ஒரு ஞாபக மறதி பேராசிரியர் என்னவென்று தெரியாமல் தெருவில் சுற்றுவது போல் திணறுகிறார் தோனி. இவரது இந்த பிற்போக்குத் தன அணுகுமுறையினால் மெக்கல்லம், வாட்லிங் பார்டன்ர் ஷிப் மலர்ந்தது.
FILE

உண்மையில் ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்தில் தோனி தலைமையில் 8- 0 என்று ஒரு போராட்டக்குணம் கூட இல்லாமல் இந்திய அணி சரணடைந்தபோதே அவரை டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவித்திருக்கவேண்டும். கேப்டன் அணியையும் வீரர்களையும் காப்பற்ற முனையும்போது அவரை நீக்கவேண்டிய தருணம் வந்து விட்டது என்று பொருள்.

அதன் பிறகு தோனி ஆஸ்ட்ரேலியாவை சொந்த மண்ணில் 4- 0 என்று வீழ்த்தினார். ஆகவே இந்தியாவில் ஸ்பின் பிட்சில் அவர் சிறப்பாக இருக்கிறார். அதுவே அயல்நாட்டில் வேறுபட்ட சூழ்நிலைமைகளில் பிற்போக்குத் தனத்திற்கு சென்று விடுகிறார்.

ஆனால் அப்போது தோனியை கேப்டன்சியிலிருந்து விடுவிக்காததை புரிந்து கொள்ள முடிகிறது காரணம் நிறைய மூத்த வீரர்கள் ஓய்வுபெற்றனர். அப்போது கேப்ட்னையும் இறக்குவது சரியாக இருந்திருக்காது.
FILE

ஆனால் இப்போது கோலி வந்து விட்டார். ஒரு டாப் பேட்ஸ்மெனாக வந்து விட்ட நிலையில் அவரிடம் பொறுப்பை ஒப்படைப்பது இப்போது சிறந்த தெரிவாகும். கிளார்க்கை உதாரணம் காட்ட விரும்புகிறேன்.

ஜான்சனால் வெற்றி பெற்றார் என்று கூறுவதை ஏற்கமுடியாது, ஜான்சனை அவர் எப்படி பயன்படுத்தினார் என்பது முக்கியம், ஜான்சன் போன்ற பவுலர்கள் கிரேம் ஸ்மித், தோனி, அலிஸ்டர் குக் போன்ற பிற்போக்குவாத கேப்டன்களிடையே சிறப்பாக வீசியிருக்க முடியாது என்று என்னால் நிச்சயமாக கூறமுடியும்.

கோலி ஒரு தைரியமான கேப்டனாக இருக்கவேண்டும், இஷாந்த் சர்மாவின் தாறுமாறான பந்து வீச்சிற்கு பாதுகாப்பான பீல்டிங் செட் அப் செய்யாமல் நல்ல டைட்டான பீல்ட் செட் அப் செய்து அதற்கு இஷாந்த் ஒத்து வருகிறாரா என்பதை விரைவில் முடிவெடுக்கவேண்டும். இஷாந்த் ஒத்து வரவில்லையா? மற்றொரு பவுலரை கொண்டு வருவதுதான் கேப்டன்சி.
FILE

எதிரணியினர் தவறு செய்து அவர்களே அவுட் ஆவார்கள் என்ற தோனியின் எண்ணம் ஒருநாள், T20 கிரிக்கெட்டிற்கு ஒத்து வரும், ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அது சரிபட்டு வராது, அன்று மெக்கல்லம் அதனை நிரூபித்தார்.

கோலி ஆசியக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டால் உடனே அவரை டெஸ்ட் கேப்டனாக்கவேண்டும், ஆனால் இந்திய அணித் தேர்வுக்குழுவினர் எப்போதும் மூத்த வீரர்களை அவர்கள் இஷ்டத்திற்கு விளையாட அனுமதிக்கின்றனர்.

இவ்வாறு கூறியுள்ளார் இயன் சாப்பல்!