வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. கட்டுரைகள்
Written By Webdunia

ஐபிஎல். சூதாட்ட விசாரணை ஒத்திவைப்பு! பதட்டத்தில் பிசிசிஐ!

ஐபிஎல். கிரிக்கெட் சூதாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்த முட்கல் கமிட்டி அறிக்கை மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் மார்ச் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
FILE

பிசிசிஐ. பதட்டம் இன்னும் கொஞ்ச நாட்கள் நீடிக்கும் என்றே தெரிகிறது. முட்கல் கமிட்டியின் உள் விஷயங்களை கோர்ட் ரகசியமாக வைத்திருக்கவேண்டும் என்று பிசிசிஐ கோரியுள்ளது. தப்பு நடக்கவில்லையெனில் ஏன் 'ரகசியம்' தேவை?

பிரச்சனையில் உள்ள விஷயங்கள்:

1. குருநாத் மெய்யப்பனின் வாக்குமூலம்

2. ஐபிஎல் என்ற பணமழையை தக்கவைப்பது.

3. 2014 ஐசிசி T20 உலகக் கோப்பை கிரிக்கெட் அரங்கைல் இந்தியாவின் மரியாதையை காப்பது.

குருநாத் மெய்யப்பன் நட்பு ரீதியான சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவரே ஒப்புக்கொண்டதாக செய்திவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 'நட்பு ரீதியான சூதாட்டம்' எந்த அளவுக்கு சட்டரீதியாக எடுபடும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இரண்டாவது உச்சநீதிமன்றம் பிசிசிஐ-யின் ரகசிய கோரிக்கையை ஏற்காமல் பெட்டிங்கில் ஈடுபட்ட அந்த முக்கியத் தலை வீரரை நேரடியாக குறிப்பிட்டு விட்டால் என்ன ஆவது? அப்படி நடந்தால் நிச்சயம் கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல். பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டார்கள் என்பது உறுதி.

அப்படி சூதாட்டத்திற்கு இணங்கிய பெரிய வீரர்களின் பெயர்களை உச்சநீதிமன்றம் வெளியிட்டு விட்டால் அதே வீரர்கள் ஐசிசி உலகக் கோப்பை T20கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தால் நிச்சயம் இந்திய கிரிக்கெட் வீரர்களைப் பற்றிய பிம்பம் உலக அரங்கில் நாறி விடும். ஏனெனில் என்னதான் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் என்றெல்லாம் பிரதேச குறிப்புகள் இருந்தாலும் கிரிக்கெட் என்பது இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை தேசிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது எழுதுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் விதிமுறைகளின் படி அந்த அணி ஐபிஎல். கிரிக்கெட்டில் விளையாட முடியாது.

இதனால் உச்சநீதிமன்றத்தின் விசாரணை தள்ளி வைப்பு முடிவு பிசிசிஐ-க்கு ஒரு புறம் நிம்மதி அளித்தாலும் வயிற்றில் நெருப்பைக் கட்டுக்கொண்டு இருக்கவேண்டிய நிலைதான் உள்ளது. பிசிசிஐ-யின் பதட்டத்தை உச்சநீதிமன்றம் நீடித்துள்ளது என்றே கூறவேண்டும்