ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் என்பது உண்மையில் ஒரு புரியாத மர்மமாகவே நடைபெற்று வருகிறது. வீரர்களுக்கு செலவிடப்படவேண்டிய அதிகபட்ச தொகையில் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு முறையாக அனுசரிக்கப்படுகிறதா அல்லது ஒப்பந்தத்திற்கு வெளியே மேலும் சில ரகசிய பரிமாற்றங்கள் நடைபெறுகிறதா என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகளாகவே உள்ளது.