Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஐசிசியை பிடித்த மூவர் கூட்டணி! காசு பணம் துட்டு மணி மணி...

FILE

உலகில் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களில் அதிக பணம் புரள்வது இந்தியா, இங்கிலாந்து ஆஸ்ட்ரேலியா ஆகிய நாடுகளிலேயே. மற்ற நாடுகளில் நடக்கும் போட்டிகளில் எதுவும் டப்பு பேர வில்லையாம்.

இதனால் இந்த மூவர் கூட்டணிதான் இனி கிரிக்கெட்டை நடத்துமாம். கிரிக்கெட்டில் ஐசிசிக்கு வரும் வருவாயில் 80% இந்தியா மூலமகா பல்கிப்பெருகுகிறதாம். இதனால் இந்தியா தனக்கு மேஜர் பங்கு வேண்டும் என்று கூறிவந்தது.

இதனைப்பயன்படுத்திக் கொண்ட ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் எங்கு தன் பண பலம் ஆசை வார்த்தைகளினால் மற்ற உறுப்பு கிரிக்கெட் வாரியங்களையும் தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டுவிடுமோ என்ற அச்சத்தில் பிசிசிஐ-யையும் கூட இணைத்துக் கொண்டு கிரிக்கெட்டை நாங்கள் தான் நடத்துவோம் என்று மூவர் கூட்டணி முடிவு செய்து அதற்கான வரைவு முன்மொழிவு பிரதியையும் ஐசிசியிடம் கையளித்துள்ளனர்.

Webdunia|
ஐசிசி. வணிக நடவடிக்கைகளை முற்றிலும் கவனிக்க, அதாவது ஐசிசியையே தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தது பிசிசிஐ, கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
இதற்கு கடும் எதிர்ப்பு வந்தாலும் வங்கதேசம் மட்டும் போர்க்கொடி தூக்கியது. காரணம் தங்களது டெஸ்ட் அந்தஸ்து பறிக்கப்படுமோ என்ற அச்சம் அதற்கு! நியாயம்தானே. இதனால் அதனை உறுதி செய்து கொண்டு ஆதரித்து விடும் என்றே தோன்றுகிறது. வரைவு முன்மொழிவுக்கு இன்னும் ஒரு வாக்குதான் தேவை அதனை மூவர் கூட்டணி வென்று விடும் என்றே தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :