இந்தியாவில் வந்து டெஸ்ட் தொடரை 2- 0 என்று தோற்ற ஆஸ்ட்ரேலிய அணியின் வீரர்கள் வழக்கம் போல் தங்கள் நாட்டுக்கு சென்று விளையாடி விட்டு வந்த நாட்டை மட்டம் தட்டிப் பேசியுள்ளனர். இதில் குறிப்பாக மேத்யூ ஹெய்டன் இந்தியாவை மூன்றாம் உலக நாடு என்று வர்ணித்துள்ளது இந்திய ஊடகங்கள் மற்றும் வீரர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.