வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. க‌ட்டுரை
Written By Webdunia

சினி பாப்கார்ன் - எண்பது கே‌ஜி சில்க் ஸ்மிதா

எண்பது கே‌ஜி சில்க் ஸ்மிதா!

FILE
மச்சான்ஸ்... சில்க் ரொம்ப அழகு, அவங்க கேரக்ட‌ரில் நடிக்க தமிழ்ல நமக்கு மட்டும்தான் கவர்ச்சி இருக்கு. யாராவது சில்க் கேரக்ட‌ரில் நடிக்க கேட்டால் சம்பளம் குறைக்குது என்று போன வாரம் முழுக்க கீறல் விழுந்த ‌‌ரிக்கார்டாக சொல்லிக் கொண்டிருந்தார் நமிதா. அவ‌ரின் து‌ணிச்சலைப் பார்த்து ஆனானப்பட்ட நிருபர்களே நடுங்கிப் போனார்கள்.

பிறகு... அவ‌ரின் இப்போதைய வெயிட்டுக்கு சில்க் இல்லை ஏதாவது பல்க் கேரக்ட‌ரில் வேண்டுமானால் நடிக்கலாம். நாம் எண்பது என்று போட்டிருப்பதெல்லாம் ஒரு ம‌ரியாதை. பார்த்தால் நூறைத் தொடுவார் போலிருக்கிறது. தினச‌ரி மானாட வந்தாலும் இந்த லேட்டஸ்ட் ஃபோட்டோக்களைப் பாருங்களேன்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா?

FILE
ஆக்சன் ஹீரோக்கள் படத்திலேயே ஹீரோவை கலாயப்பவர் சந்தானம். இவருக்கு ஹீரோவாக ஆசை. பவர் ஸ்டாரை டம்மியாகப் போட்டு கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தை தொடங்கியிருக்கிறார்.

கலாய்ப்பதுக்குண்ணே படைக்கப்பட்டவர் நமது பவர் ஸ்டார். சந்தானம் ஹீரோ சவா‌‌ி செய்ய பவர் ஸ்டார் ச‌ரியான ராக்கெட். படங்களில் சாமியாரை கலாயக்கும் சந்தானம் ஒருகாலத்தில் நித்தியின் அரவணைப்புக்குள் இருந்திருக்கிறார்.

நல்லவேளை கதவை திற காற்று வரட்டும் சம்பவத்துக்கு முன் பார்ட்டி எஸ்கேப். தாமதித்திருந்தால் இவரை வைத்து பத்தி‌‌ரிகைகள் லட்டு விநியோகித்திருக்கும். சந்தானம் ஜஸ்ட் மிஸ்.

FILE
ப்ளேபாயில் ஷெர்லின் சோப்ரா!

இந்திய அளவில் பெரும் சாதனை செய்திருக்கிறார் ஷெர்லின் சோப்ரா. இதுவரை பிரபல ப்ளேபாய் பத்தி‌‌ரிகையில் இந்திய நடிகைகள் யாரும் நிர்வாணமாக போஸ் தந்ததில்லையாம்.

இந்த அவமானத்தை துடைக்க சென்ற வாரம் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார் ஷெர்லின். அங்கு ஷெர்லினை விதவிதமாக படம் எடுத்து தள்ளினர் ப்ளேபாய் புகைப்படக்காரர்கள். ஷெர்லினுக்கு இதில் எந்த வெட்கமும் இல்லை.

முன்பெல்லாம் த‌த்தணூண்டு துணியை மேலாக போட்டிருப்பார். இப்போது அதையும் எடுத்திருக்கிறார், அவ்வளவே. இந்தியாவின் சாதனையாளர் பட்டியலில் அடுத்தமுறை ஷெர்லின் பெயரை சேர்த்திட வேண்டியதுதான்.

சக்‌‌ி டோலட்டியின் மொக்க காப்பி!

‌‌ரிட்லி ஸ்காட்டின் பாடி ஆஃப் லைஸ் படத்தில் பாலைவனத்தின் நடுவில் நிற்கும் ஹீரோ லியோனார்டோ டிகாப்‌‌ரியோவை கொண்டு செல்ல எதிர் கோஷ்டியினர் கார்களில் வருவார்கள். சேட்டிலைட்டில் இதனை அமெ‌‌ரிக்க உளவுத்துறை மானிட்டர் செய்து கொண்டிருக்கும்.

அவர்களை குழப்புவதற்காக அனைத்து கார்களும் டிகாப்‌‌ரியோவை வட்டமிடும். அதில் கிளம்பும் தூசியில் உளவுத்துறையால் எதையும் பார்க்க முடியாமல் போகும். அவர் எந்தக் கா‌‌ரில் கொண்டு செல்லப்படுகிறார் என்பதை உளவுத்துறையால் கண்டுபிடிக்க முடியாது.
FILE

இந்தக் காட்சியை அப்படியே பில்லா 2-வில் வைத்தி‌‌ருக்கிறார் சக்‌‌ி டோலட்டி. அதில் ஆப்டாக பொருந்திய காட்சி பில்லா 2-வில் காமெடி பீஸாக சி‌‌ரிக்க வைக்கிறது. ஏம்பா நம்ம காப்பிக்கு ஹாலிவுட் டிகாஷன் செட்டாகுமா?

இதுதாண்டா சொந்தத் தயா‌‌ரிப்பு!

FILE
அடுத்தவன் தயா‌‌ரிப்பு என்றால் ஃபைவ் ஸ்டா‌‌ரில் ரூம் போடும் நம் இயக்குனர்கள் சொந்தத் தயா‌‌ரிப்பு என்றால் நாயர் கடையில் டீ கூட வாங்கித் தருவதில்லை. அதிலும் தங்கர்பச்சான் போன்றவர்கள் ஃபிலிம் இல்லாமல் கேமராவை ஓட்ட முடியுமா என்று யோசிக்கிறவர்கள்.

அம்மாவின் கைப்பேசி படத்தை தங்கர் திரைக்களம் என்ற சொந்த பேன‌ரில் தயா‌‌ரிக்கிறார். பட்ஜெட் எப்படி என்று உடனே கேள்வி வருமே. இதோ இந்த படத்தில் ஹீரோ சாந்தனுவின் சட்டையைப் பாருங்கள். ஏதோ அப்ரண்டிஸிடம் தைத்து வாங்கியது போல் மேலும் கீழுமாக... நமக்கென்னவோ தங்கரே தைத்திருப்பாரோ என்று தோன்றுகிறது.

இதுக்குப் பேருதாண்டா சொந்த தயா‌‌ரிப்பு.