Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய், அட்லி படம்... முதல் தகவல் அறிக்கை

வியாழன், 2 பிப்ரவரி 2017 (12:51 IST)

Widgets Magazine

சில வருடங்களுக்கு முந்தைய விஜய் படங்கள் குறித்து யோசித்துப் பார்ப்போம். காவலன், வேலாயுதம் போன்ற சுமார்  படங்களே அவரது வெற்றிப் படங்கள். வேலாயுதம் படத்தின் சுமார் வெற்றியை கொண்டாட வேண்டிய நிலையில்தான் விஜய்  ரசிகர்கள் இருந்தார்கள். அதனை மாற்றியது துப்பாக்கி.

 
முருகதாஸின் படம் விஜய்யின் மார்க்கெட்டை சற்று விசாலப்படுத்தியது. கத்தி அதனை அடுத்த தளத்துக்கு கொண்டு சென்றது. ஒருகாலத்தில் திருமலை, கில்லி, திருப்பாச்சி, சிவகாசி செய்த வேலையை துப்பாக்கி, கத்தி படங்கள் செய்தன. அதன் தொடர்ச்சி விட்டுப்போகாமலிருக்க விஜய்க்கு கிடைத்த வாய்ப்புதான் தெறி.
 
அட்லியின் தெறி துப்பாக்கி, கத்தி படங்களைத் தாண்டி வசூலித்தது. தெறியின் இந்த வெற்றி மட்டும் இல்லாதிருந்தால் பைரவா  இந்தளவுக்கு தேறியிருக்குமா என்பது சந்தேகம்.
 
விஜய் எந்த இயக்குனருடன் இணைந்தாலும், படம் வெற்றி பெறுமா என்பதை படம் வெளியாகும் நாள்வரை கணிக்க இயலாது.  ஆனால், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்தப் படம் அப்படியல்ல. படம் தொடங்கும் முன்பே கடும் எதிர்பார்ப்பு. படம்  நிச்சயம் வெற்றி பெறும் என்று ரசிகர்கள், விநியோகஸ்தர்கள் என அனைத்துத் தரப்பும் நம்புகின்றனர்.
 
நேற்று பிப்ரவரி 1 -ஆம் தேதி படம் சென்னையை அடுத்த பனையூரில் தொடங்கியது. படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை.  படத்தை தயாரித்திருக்கும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தங்களின் 100 -வது படமாக இதனை அறிவித்துள்ளது. சங்கமித்ரா என்ற  300 கோடி பட்ஜெட் படத்தை தங்களின் 100 -வது படமாகச் சொன்னவர்கள் அந்த பெருமையை விஜய் படத்துக்கு விட்டுத்  தந்ததிலிருந்து இதன் முக்கியத்துவத்தை உணரலாம்.
 
விஜய்யுடன் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக  உறுதி செய்துள்ளனர். விஜய்யின் உதயா, அழகிய தமிழ்மகன் படங்களுக்குப் பிறகு ரஹ்மான் இந்தப் படத்துக்கு  இசையமைக்கிறார். ரஹ்மானின் இசை இந்தப் படத்தின் இன்னொரு பலமாக இருக்கும். உதயா, அழகிய தமிழ்மகன்  இயக்குனர்களைவிட ரசனையுடன் பாடல்களை அட்லி படமாக்குவார் என்பது இன்னொரு சிறப்பு.
 
படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி ரூபன் எடிட்டிங்கை கவனிக்கிறார். சண்டைப் பயிற்சி அனல் அரசு.  கலை இயக்கம் முத்துராஜ்.
 
மிகத்திறமைவாய்ந்த தொழில்நுட்பக் குழுவுடன் இந்தப் படம் தொடங்கியிருக்கிறது. பனையூரைத் தொடர்ந்து சென்னை பின்னி  மில்லில் அமைக்கப்பட்ட அரங்கில் படப்பிடிப்பு தொடர உள்ளது. ஐரோப்பாவில் சில பாடல் காட்சிகளை படமாக்க உள்ளனர்.
 
அமெரிக்காவில் சில காட்சிகளை படமாக்குவது அட்லியின் திட்டம், புதிய அதிபர் ட்ரம்பின் அதிரடி உத்தரவுகளால் அமெரிக்கா  செல்வது முன்னைவிட கடினமாகியிருக்கிறது. அதனால் அமெரிக்காவா இல்லை வேறு நாடா என்பது இன்னும் முடிவாகாமல்  குழப்பத்தில் உள்ளது.
 
விஜய்யின் 61-வது படமான இது, நிச்சய வெற்றி என்ற நம்பிக்கையுடன் தொடங்கியிருப்பதே ஒரு பாஸிடிவான அம்சம்தான்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விஜய் படத்துக்காக பிரமாண்ட அரங்குகள்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் இன்று தொடங்கியுள்ளது. இதில் காஜல் அகர்வால், ...

news

ஜீ.வி.பிரகாஷ் வேண்டாம்... பிரபல நடிகை முடிவு

ஜீ.வி.பிரகாஷ் படம் என்றால் விடலைத்தனமாகத்தான் இருக்கும் என்பது சின்ன குழந்தைக்கும் ...

news

தனுஷ் மனசை இப்படி காயப்படுத்தலாமா?

தனுஷ் மனசை இப்படி காயப்படுத்தலாமா?

news

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி திடீர் சந்திப்பு

தனது படங்கள் வெளியாகும் நேரத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதை ரஜினி வழக்கமாக ...

Widgets Magazine Widgets Magazine