1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2015 (13:23 IST)

சென்னை மற்றும் வெளிநாடுகளில் வேதாளம், தூங்காவனம் படங்களின் வசூல்

கடந்த 10 -ஆம் தேதி தீபாவளிக்கு வேதாளம், தூங்கா வனம் படங்கள் வெளியாயின.


 

 
தமிழகத்தில் பெய்த கனத்த மழையை தாக்குப் பிடித்து இவ்விரு படங்களும் நல்ல வசூலை பெற்றுள்ளன.
 
குறிப்பாக வேதாளம் மிகப்பெரிய வசூலை பெற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
 
சென்னையில் பெய்த கடும் மழையையும் தாண்டி நல்ல வசூலை வேதாளம் பெற்றுள்ளது. சென்ற வார இறுதியில் (13, 14, 15 தேதிகளில்) இப்படம் சென்னையில் 1.48 கோடியை வசூலித்துள்ளது.
 
இதே தினங்களில் தூங்கா வனம் சென்னையில் 82.53 லட்சங்களை தனதாக்கியுள்ளது. வேதாளத்தைவிட ஏறக்குறைய 100 காட்சிகள் குறைவாக தூங்கா வனம் சென்னையில் திரையிடப்பட்டது முக்கியமானது.
 
10 -ஆம் தேதி முதல் 15 -ஆம் தேதிவரை முதல் ஆறு தினங்களில் வேதாளம் சென்னையில் 3.23 கோடிகளை வசூலித்துள்ளது. இதே ஆறு தினங்களில் தூங்கா வனத்தின் சென்னை வசூல் 1.70 கோடி.
 
யுஎஸ்ஸில் தூங்கா வனம் வேதாளத்தைவிட அதிகம் வசூலித்துள்ளது. இவ்விரு படங்களும் வெளியான வெளிநாடுகளில்...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

யுஎஸ்ஸில் மட்டுமே வேதாளத்தை தூங்கா வனம் பின்னுக்கு தள்ளியது.


 

 
இங்கு தூங்காவனம் முதல் ஆறுதினங்களில் 2.76 கோடிகளை வசப்படுத்தியுள்ளது. அதே ஆறு தினங்களில் வேதாளத்தின் யுஎஸ் வசூல், 1.74 கோடி.
 
யுகே மற்றும் அயர்லாந்தில் முதல் ஆறு தினங்களில் வேதாளம் 1.36 கோடியை வசூலித்துள்ளது. இங்கு தூங்கா வனத்தின் வசூல் 39.24 லட்சங்கள்.
 
ஆஸ்ட்ரேலியாவில் முதல் ஆறு தினங்களில் வேதாளம் 69.85 லட்சங்களையும், தூங்கா வனம் 25.18 லட்சங்களையும் தனதாக்கியுள்ளது.
 
மலேசியாவிலும் வேதாளமே முன்னிலை பெற்றுள்ளது. இங்கு முதல் ஆறுதினங்களில் வேதாளம் 2.97 கோடிகளையும், தூங்கா வனம் 92.76 லட்சங்களையும் வசூலித்துள்ளது.
 
யுஎஸ் தவிர அனைத்து உள்நாடு வெளிநாடுகளிலும் வேதாளமே முன்னிலை பெற்றுள்ளது. அஜித், கமல் படங்கள் இதுவரை நான்குமுறை ஒரே நாளில் வெளியாகியுள்ளன.
 
முதல் மூன்றுமுறை கமலிடம் தோற்ற அஜித், முதல்முறையாக இப்போது வெற்றி பெற்றிருக்கிறார்.
 
படத்தின் பட்ஜெட்டை வைத்துப் பார்க்கையில் தூங்கா வனமும் வெற்றிப் படம் என்பது முக்கியமானது.