Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சினி பாப்கார்ன் - பஞ்சாபி சிங் கெட்டப்பில் விஜய்...?


ஜே.பி.ஆர்.| Last Modified செவ்வாய், 31 ஜனவரி 2017 (17:20 IST)
லண்டனில் நயன்தாரா நடிக்கும் கொலையுதிர்காலம் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. இந்தப் படத்தின் போஸ்டர் வெளியிட்டபோதே பெருமத் பஞ்சாயத்து.

 


ஹாலிவுட்டில் வெளியான ஹஷ் என்ற திரைப்படத்தின் காப்பி இது என்றனர் (போஸ்ரை வச்சு எப்படித்தான் இதை கண்டுபிடிக்கிறாங்களோ). இதற்கு பதிலளித்த கொலையுதிர்காலத்தின் இயக்குனர் சக்ரி டோலட்டி, கதை என்னோடது, நயன்தாரா கதாபாத்திரத்தில் மட்டும் ஆங்கிலப் படத்தின் சாயல் இருக்கும் என்றார். தமிழ்ப்பட இயக்குனர்கள் இப்படி பட்டும்படாமலும் ஒத்துக் கொள்கிறார்கள் என்றால் மொத்தமாக அடித்திருப்பார்கள். படம் வரட்டும் சாயல் மட்டும்தானா இல்லை சகலமும் ஆங்கிலப்படமா என்பது அப்போது தெரியும்.
 
கொலையுதிர்காலம் போலவே அட்லி படத்துக்கும் பஞ்சாயத்து. அட்லியின் ராஜா ராணி மௌனராகம் மற்றும் ஒரு கன்னடப்படத்தின் ஒட்டு வேலை. தெறி சத்ரியன் படத்திலிருந்து உருவியது. இரண்டு படம் தழுவல் எனும் போது இயல்பாகவே அடுத்தப் படம் எந்தப் படத்தின் உல்டா என்று கேள்வி எழுவது சகஜம். விஜய்யை வைத்து அட்லி இயக்கப் போகும் படம், அண்ணாமலையின் ஹைடெக் வெர்சன் என்கிறார்கள். விஜய் தாடி மீசை வளர்த்திருப்பதை வைத்து, விஜய்யின் ஒரு கதாபாத்திரம் பஞ்சாபி சிங் என்கிறார்கள். படம் வரும்வரை இவங்க கற்பனை குதிரையை கட்டுப்படுத்த முடியாது.
 
இரண்டு நெகடிவ் விஷயங்கள் சொன்னதால் ஒரு பாஸிடிவ் விஷயத்தைப் பார்ப்போம். கௌரவ் இயக்கத்தில் உதயநிதி ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் ராதிகாவுக்கு முக்கிய வேடம். ஒரு காட்சியில் ராதிகா பஸ் ஓட்ட வேண்டும். சும்மா பஸ்ஸில் ஏறி அமர்ந்து ஸ்டியரிங்கை திருப்பினால் போதும். ஆனால், ராதிகா அதனை மறுத்து நிஜமாகவே பஸ் ஓட்ட பயிற்சி எடுத்து, குறிப்பிட்ட காட்சியில் அவரே நடித்துள்ளார். அறிமுக நடிகைகள் ராதிகாவிடம் பாடம் படிங்கம்மா.
 
இது கொஞ்சம் சிக்கலான விஷயம். ஊர் உலகத்துல எந்த ஜோடி ஒண்ணு சேர்ந்தாலும் இல்ல பிரிஞ்சாலும் தனுஷை வைத்துதான் தமுக்கடிக்கிறது இணைய உலகம். சிநேகா, பிரசன்னா பிரியுறாங்க என்று ஒரு வதந்தி. உடனே, அதுக்கு காரணம் தனுஷ்தான்னு மீம்ஸ் போட்டு கலாய்க்கிறாங்க. சமந்தா - நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தத்துக்கும் தனுஷுக்கும் என்ன சம்பந்தம்? தனுஷ் படத்தைப் போட்டு, நிச்சயம்தானே, திருமணத்துக்குள்ள ஜோடியை பிரிச்சிடுவோம்னு மீம்ஸ் பட்டைய கிளப்புது. விஜய் - அமலா பால் பிரிஞ்சதுக்கு தொடங்குன இந்த கூத்து இப்போதைக்கு முடியும்போல தெரியலை.


இதில் மேலும் படிக்கவும் :