Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்சி


ஜே.பி.ஆர்.| Last Modified புதன், 23 நவம்பர் 2016 (10:26 IST)
பிரமாண்ட இயக்குனரின் பிரமாண்ட படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு சொதப்பல்களைத்தான் கோடம்பாக்கம் சுவாரஸியமாக பேசிக் கொண்டிருக்கிறது. சென்னையில் விழா வைத்தால் உச்சம் வர மாட்டார் என்பதற்காகவே மும்பையில் விழாவுக்கு ஏற்பாடு செய்தனர். வில்லன் நடிகரின் ரசிகர்களையும் கவரலாம், அது படத்தின் இந்திப் பதிப்பை பூஸ்ட் செய்வதாகும் என்று இரண்டு கணக்குடன் மும்பையை தேர்வு செய்தனர்.

 
 
தென்னிந்திய படம், நடிகர், கலைஞர்கள் என்றால் வடஇந்திய ஊடகங்களுக்கு வேப்பங்காய். எப்படியாவது மட்டம் தட்டப் பார்ப்பார்கள். இந்த விழாவுக்கு கான் நடிகர் எதிர்பாராமல் என்ட்ரி கொடுக்க, மொத்த ஊடகங்களும் விழாவை பின்னுக்குத் தள்ளி, கான் நடிகரைப் பற்றி எழுதி தீர்த்துவிட்டன. 
 
விழாவுக்கு அழைக்காமலே வந்தேன் என்ற நடிகரின் ஸ்டேட்மெண்டை வைத்து அவரை தூக்கி வைத்துப் புகழ, இரண்டாம்பட்சமாகிப் போனது பர்ஸ்ட் லுக் விழா. ஆறு கோடி செலவு செய்து விழா நடத்தியது நாம், பெயரை அடித்துக் கொண்டு போவது அவரா என்று மொத்த யூனிட்டுக்கும் கடுப்பு என்கிறது ஸ்டுடியோ வட்டாரம்.
 
மொத்த விழாவையும் தங்களது யூடியூப் சேனலில் ஒளிபரப்புவதாக தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்தது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறால் அது சாத்தியமாகவில்லை. ஒளிபரப்பை பார்க்கலாம் என்று காத்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்தை ஏறு ஏறு என்று ஏறிவிட்டனர். ஆனால், விழா நடந்ததற்கு மறுநாள், விழாவை யூடியூபில் 1.3 மில்லியன் பேர் பார்த்தனர் என்று தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஒளிபரப்பப்படாத நிகழ்ச்சியை இத்தனை பேர் எப்படி பார்த்தனர் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக யூடியூப் சேனலில் தயாரிப்பு தரப்பின் தொழில்முறை விளம்பரங்களே அதிகம் காண்பிக்கப்பட்டன. 
 
பர்ஸ்ட் லுக் வெளியீட்டை தமிழகத்தில் நடத்தியிருந்தால் ரசிகர்கள் கொண்டாடியிருப்பார்கள். மும்பையில் நடத்தியதால் கொண்டாட்டத்தின் சதவீதம் குறைந்துவிட்டது. அதனால் என்ன, சென்னையிலும் ஒரு விழா நடத்திவிடுவோம் என்று இயக்குனரும், தயாரிப்பு தரப்பும் தயாராக உள்ளனர். ஆனால், உச்ச நட்சத்திரம், இனிமேல் படம் தொடர்பான எந்த விழாவிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று முறுக்கிக் கொண்டுள்ளாராம்.
 
படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் வெளியீட்டு விழாக்கள் உச்சம் இல்லாமலே நடக்கும் என்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :