Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்ஸி

செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (11:57 IST)

Widgets Magazine

இளைய சேனாதிபதியின் புதிய படம் பிப்ரவரியில் தொடங்கியது. சென்னை புறநகரில் தொடங்கப்பட்ட இந்தப் படம் குறித்து,  படக்குழுவே ஆச்சரியம் கலந்த அச்சத்துடன் பேசி வருகிறது.


 
 
முதல் படத்திலேயே கமர்ஷியல் ராஜாவான அந்த இயக்குனர் இரண்டாவது படத்தை தெறிக்கவிட்டதால் மூன்றாவது படமான இதில் அவருக்கு லம்பாக ஒரு சம்பளம் பேசப்பட்டது. என்ன ஒரு அஞ்சு கோடி இருக்குமா என்று அசால்டாக கேட்டுவந்த கோடம்பாக்கத்துக்கு இதயத்தில் இடி இறக்கியது அவரது உண்மைச் சம்பளம். ஒன்றல்ல இரண்டல்ல... பத்து கோடிகள். இப்படியொரு அசுர சம்பள உயர்வை இந்திய சினிமா சமீபத்தில் கண்டதில்லை.
 
இயக்குனருக்கு பத்து, நடிகருக்கு இருபத்தைந்து, மூன்று நாயகிகளுக்கு சேர்த்து மூன்று கோடி என்று இதுவே கிட்டத்தட்ட 38 கோடிகள் வருகிறது. டெக்னிஷியன்கள் சம்பளம், படப்பிடிப்பு செலவு எல்லாம் சேர்த்தால்...?
 
இந்த கேள்விக்கே முழி பிதுங்குகிறது இல்லையா. படப்பிடிப்பு செலவை கேட்டால் மயக்கம் வந்தாலும் வரும்.
 
முதல் ஷெட்யூல்டில் சேனாதிபதியின் எண்பதுகளிலான காட்சியை எடுத்தனர். கிராமத்துப் பின்னணி. நாயகனின் பண்ணைக்காக 250 மாடுகள் தேவைப்பட்டிருக்கிறது. வாடகைக்கு எடுத்தால் வசதியாக இருக்காது என்று மொத்தமாக 250 மாடுகளையும் விலைக்கே வாங்கியிருக்கிறார்கள். இதனை பராமரிக்க 40 ஆள்கள். இவர்களுக்கு சம்பளம் பேட்டா, சாப்பாடு... மாடுகளுக்கு  தீனி...
 
முதல் ஷெட்யூல்டில் இந்த மாடு மேய்ப்பவர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்குமான சாப்பாடும் சம்பளமும் மட்டுமே தினம் பல லட்சங்களை முழுங்கியிருக்கிறது. இது எல்லாம் படப்பிடிப்புக்கு சம்பந்தமில்லாத செலவுகள்.
 
முதல் ஷெட்யூல்டில் கூட்டிக்கழித்தால் ஏழரை கோடி செலவாகியிருக்கிறது. 20 நாளில் இந்தச் செலவு. இன்னும் எத்தனையோ  தினங்கள் படம் எடுக்க வேண்டியிருக்கிறது.
 
இயக்குனர் முந்தையப் படத்தை தெறிக்கவிட்டாலும், அவர் இழுத்துவிட்ட செலவுகளுக்காக இயக்குனரை தெறிக்கவிட நினைத்திருக்கிறார் தயாரிப்பாளர். அவரை வைத்து படம் பண்ணுகிறார்கள் என்றதும் புதிய தயாரிப்பாளருக்கு போனை போட்டு, தம்பியை அப்பப் தட்டி வைக்கலைன்னா பட்ஜெட் எகிறி பணம் பாதாளத்துக்கு போகும் என்றிருக்கிறார். இப்போது அதுதான்  நடந்து கொண்டிருக்கிறது.
 
இந்த லட்சணத்தில் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த லொகேஷன் பார்க்க இயக்குனர் தம்பி கிளம்புகிறாராம்.
 
அசத்துங்க தம்பி அசத்துங்க...


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சினிமாவில் அதை அனுஷ்கா தான் கற்றுத் தந்தார் - தமன்னா பேட்டி

நடிகைகளுக்குள் போட்டி இருக்கிறது என்பதும், பரஸ்பரம் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கிறார்கள் ...

news

நயன்தாராவுக்கு பெரிய குழந்தை, அமலா பாலுக்கு சின்ன குழந்தை

நயன்தாராவுக்கு மகளாக வளர்ந்த சிறுமியை நடிக்க வைத்த இயக்குனர் சித்திக், அமலா பாலுக்கு ...

news

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ஓட்டிய கார் மோதி விபத்து!

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ஓட்டிச் சென்ற கார், ஆட்டோ ஒன்றின் மீது மோதி ...

news

இறைவன் எனக்கு தந்த ஆஸ்கார் இதுதான். விக்னேஷ் சிவன் பெருமிதம்

'போடா போடி' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இயக்குனர் விக்னேஷ் சிவன், கடந்த ஆண்டு ...

Widgets Magazine Widgets Magazine