1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : சனி, 28 பிப்ரவரி 2015 (12:45 IST)

சுந்தர் சி. ரீமேக் செய்யும் இரு மலையாளப் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை

சுந்தர் சி. யின் வெற்றியில் மலையாளப் படங்களுக்கு கணிசமான பங்கிருக்கிறது. மலையாளப் படங்களின் நகைச்சுவை காட்சிகளின் பாதிப்பில் சுந்தர் சி. உருவாக்கிய படங்கள் அவரை மினிமம் கியாரண்டி இயக்குனராக இன்றுவரை நிலைநிறுத்தியுள்ளன. 
முறைப்படி ரீமேக் உரிமை வாங்கி இரு மலையாளப் படங்களை இயக்கி நடிக்கிறார் சுந்தர் சி. தயாரிப்பது அவரது மனைவி குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ்.
 
சுந்தர் சி. உரிமை வாங்கியிருக்கும் படங்களில் ஒன்று, 2005 ஜுலை 4 வெளியான ரஃபி மெக்கார்டின் இயக்கிய பாண்டிப்படா. திலீப் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடம் ஏற்றிருந்தார். அவர் நடித்த முதல் மலையாளப் படம் இது.
 
திலீப் தமிழ்நாட்டில் சிறிது இடம் வாங்குகிறார். கடனில் மூழ்கியிருக்கும் அவர் அதிலிருந்து தப்பிக்க அந்த நிலத்தை விற்றாக வேண்டும். பாண்டித்துரை, கருப்பண்ணா சுவாமி என்ற இரு பண்ணையார்களின் பகைக்கு நடுவில் சிக்கிய நிலம் அது. அதனை யாராவது வாங்கியது அறிந்தால் அவர்களைப் போட்டுத்தள்ளவும் தயங்காதவர்கள் பாண்டிதுரையும், கருப்பண்ணா சுவாமியும். அவர்கள் இருவரையும் தாஜா செய்து நிலப்பிரச்சனையிலிருந்தும், காதல் பிரச்சனையிலிருந்தும் திலீப் எப்படி விடுபடுகிறார் என்பது கதை.
 
பாண்டிதுரையாக பிரகாஷ்ராஜும், கருப்பண்ணா சுவாமியாக ராஜன் பி தேவும் நடித்திருந்தனர். ராஜன் பி தேவின் மகளாக நவ்யா நாயர். ஹீரோ திலீபாக இருந்தாலும் ஹீரோவுக்குரிய கெத்துடன் படம் நெடுக வருகிறவர் பிரகாஷ்ராஜ். திலீபின் காமெடி படத்துக்கு பக்க பலமாக அமைந்தது.
 
இந்தப் படத்தின் ரீமேக்கில் பிரகாஷ்ராஜ் வேடத்தில் சுந்தர் சி. நடிக்கிறார். திலீப் வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. அந்த முன்னணி நடிகருக்கு காமெடி வரவில்லையெனில் படம் பணால். நம்மை பொறுத்தவரை சிவ கார்த்திகேயன் சரியான சாய்ஸnக இருப்பார்.
சுந்தர் சி. ரீமேக் செய்து நடிக்கப் போகும் இன்னொரு படம் சென்ற வருடம் செப்டம்பரில் திரைக்கு வந்த வெள்ளிமூங்கா. பிஜு மேனன் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை ஜிபு nஜக்கப் இயக்கியிருந்தார். நிக்கி கல்ராணி, அஜு வர்க்கீஸ், சித்திக், கே.பி.ஏ.சி.லலிதா, ஆசிப் அலி போன்றேnர் நடித்திருந்தனர். 
 
சொந்த ஊரில் செல்லாக்காசு என்று அறியப்படும் அரசியல்வாதியான பிஜு மேனன் எப்படி தனது சாதுர்யத்தால் எம்எல்ஏ வாகி தனது காதலிலும் வெற்றி பெறுகிறார் என்பதை திகட்ட திகட்ட நகைச்சுவையுடன் சொன்ன படம். இதில் பிஜு மேனன் 42 வயது நடுத்தர வயதுக்காரராக நடித்திருந்ததால் சுந்தர் சி. க்கு அவரது வேடத்தை செய்வது பிரச்சனை இல்லை. ஆனால், காமெடி? பிஜு மேனன் செய்ததில் பத்தில் ஒரு சதவீதம் செய்தாலே ஜெயம்தான்.
 
பிஜு மேனன் காதலிக்கும் நிக்கி கல்ராணி, ஒருகாலத்தில் அவர் காதலித்த லேனாவின் மகள். முன்னாள் காதலியின் மகளை எப்படி பிஜு மேனன் தனது மனைவியாக்கிக் கொள்கிறார் என்பது நகைச்சுவை கலந்த புத்திசாலித்தனம். 3 கோடியில் தயாராகி 20 கோடிகளை இப்படம் சூலித்தது.
 
மோகன்லாலின் எவர்கிரீன் பளிங்கு படத்தை தமிழில் பத்ரி வீராப்பு என்ற பெயரில் ரீமேக் செய்தார். அதில் மோகன்லால் நடித்த வேடத்தை சுந்தர் சி. செய்திருந்தார். பளிங்கின் பக்கத்தில்கூட வரமுடியாத மோசமான ரீமேக்காக அது அமைந்தது.
 
அப்படியொரு விபத்து இவ்விரு படங்களுக்கும் நேராது என நம்புவோம்.