1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : சனி, 25 ஏப்ரல் 2015 (10:24 IST)

சினி பாப்கார்ன் - ஆபாச வீடியோ சர்ச்சையில் அனுஷ்கா

டெண்டுல்கரின் மகள், சாரா ஆன் டிமாண்ட்
 
தெண்டுல்கர், அஞ்சலி தம்பதிக்கு சாரா என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர். சாராவுக்கு 18 வயது ஆகிறது. பொது விழாக்களுக்கு சாராவை தெண்டுல்கர் அழைத்து செல்கிறார். அவரை இந்திப் பட தயாரிப்பாளர்கள் சிலர் தங்கள் படங்களில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
பிரபலங்களின் வாரிசுகளை தேடிச் சென்று தங்கள் படங்களில் அறிமுகப்படுத்த இந்தியா முழுக்க தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இருக்கிறார்கள். வாரிசுகளால் மூச்சுத் திணறிக் கிடக்கிறது, இந்திய சினிமா.
 
டெண்டுல்கரின் மகள் சாராவையும் இந்திப் படங்களில் நடிக்க வைக்க சிலர் முயற்சி செய்கின்றனர். டெண்டுல்கரும், அஞ்சலியும் நல்ல வாய்ப்பு வந்தால் மகளை நடிகையாக்குவது என்று முடிவு செய்திருப்பதாகவும் தகவல். ஆனால், இது குறித்து டெண்டுல்கர் இன்னும் எதுவும் கூறாதது குறிப்பிடத்தக்கது.
 
அவரது மௌனத்தைப் பார்த்தால் மிக விரைவில் இந்திப் படத்தில் சாராவை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.

அனுஷ்காவையும் விடாத ஆபாச வீடியோ
 
நடிகைகளின் ஆபாச வீடியோ என்றால் ஆலாய் பறப்பவர்கள் இருக்கும்வரை இந்த ஆபாச வீடியோ கூத்து நிற்கப் போவதில்லை. கொஞ்ச நாள் முன்பு ராதிகா ஆப்தேயின் ஆபாசப் படங்கள் இணையத்தில் வெளியானது. வழக்கம் போல அவர், படத்தில் இருப்பது நான் அல்ல என்று மறுத்தார்.
ஹன்சிகாவின் குளியல் காட்சி என்ற பெயரில் வெளியான படங்கள் தத்ரூபம். அது நான் இல்லை என்று ஹன்சிகா மறுத்த பின்பும் யாரும் நம்புவதாக இல்லை. வசுந்தரா, லட்சுமி மேனன் என்று இந்தக் கூத்து தொடர்ந்தது. நித்யா மேனனின் முத்தக்காட்சி என்று ஒரு வீடியோ வேறு நடுவில் ஓடிக் கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில் அனுஷ்காவின் ஆபாச வீடியோ என்ற பெயரில் ஒரு ஆபாச வீடியோ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரிலீஸைதான் இணைய ஆர்வலர்கள் தேடிப் பார்த்து வருகின்றனர். விரைவில், படத்தில் இருப்பது நான் அல்ல என்று அனுஷ்கா அறிக்கை வெளியிடுவார். அது உண்மையாகவும் இருக்கலாம்.
 
ஆனால், யார் நம்பப் போகிறார்கள். 

கிளாடியேட்டர் இப்போது டைரக்டர்
 
கிளாடியேட்டர் உள்பட பல முக்கிய திரைப்படங்களில் நடித்த ரஸல் க்ரோ இயக்கியிருக்கும் முதல் படம், The Water Diviner  நேற்று யுஎஸ்ஸில் வெளியானது. சில நாடுகளில் இப்படம் சென்ற டிசம்பரிலேயே வெளியானது. என்றாலும் யுஎஸ்ஸில் இப்படம் நேற்றுதான் திரைக்கு வந்தது. அதுவும் லிமிடெட் ரிலீஸ்.
ஆஸ்திரேலியன் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இப்படம் ஏற்கனவே மூன்று விருதுகள் வாங்கியுள்ளது. மேலும், பல சர்வதேச விருதுகளை இப்படம் வெல்லும் என்கிறார்கள்.
 
1915 -இல் நடந்த போருக்குப் பின் தனது காணாமல் போன மூன்று மகன்களை தேடி ஒரு ஆஸ்ட்ரேலிய விவசாயி துருக்கிக்கு பயணமாவதுதான் படத்தின் கதை. இதில் ஆஸ்ட்ரேலிய விவசாயியாக ரஸல் க்ரோவ் நடித்துள்ளார்.
 
பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள். பக்கத்து திரையரங்கில் படம் வந்தால் ஒரு எட்டு போய் பார்த்திடுங்களேன்.