1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே..பி.ஆர்.
Last Modified: புதன், 12 அக்டோபர் 2016 (14:10 IST)

ரெமோ, றெக்க, தேவி படங்களின் வசூல் ஒரு பார்வை

ரெமோ, றெக்க, தேவி படங்களின் வசூல் ஒரு பார்வை

சென்னை பாக்ஸ் ஆபிஸை எதிர்பார்த்தது போலவே தெறிக்கவிட்டிருக்கிறது, ரெமோ. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம், முதல் மூன்று தினங்களில் அட்டகாசமான வசூலை பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.


 
 
தனுஷின் தொடரி முதல் நான்கு நாள் வசூலுடன் அதலபாதாளத்துக்கு சென்றது. கடந்த வார இறுதியில் முக்கால் லட்சமே சென்னையில் இதனால் வசூலிக்க முடிந்துள்ளது. கடந்த ஞாயிறுவரை இதன் சென்னை வசூல் 3.18 கோடிகள். படத்தின் பட்ஜெட்டுக்கு இது ரொம்ப கம்மி.
 
சென்ற வாரம்தான் தெலுங்கு பிரேமம் திரைக்கு வந்தது. ஆந்திராவில் படம் ஹிட் என்கிறார்கள். ஆனால், சென்னையில்? முதல் மூன்று தினங்களில் 4.72 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. சென்னைவாசிகளை தெலுங்கு பிரேமம் கவரவில்லை.
 
விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை சென்ற வார இறுதியில் 5.30 லட்சங்களை வசூலித்துள்ளது. படத்துக்கு கிடைத்த விமர்சனத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவுதான். சென்னையில் 2.40 கோடிகளை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது.
 
சமீபத்திய பிளாக் பஸ்டர் என்றால் அது, எம்எஸ் டோனி - தி அன் டோல்ட் ஸ்டோரி. இந்த இந்திப் படம் இந்தியாவெங்கும் சக்கைப்போடு போடுகிறது. சென்ற வார இறுதியில் 10.84 லட்சங்களை வசூலித்த படம், கடந்த ஞாயிறுவரை சென்னையில் 2 கோடிகளை வசூலித்துள்ளது. இந்திப் படங்களில் இதுவொரு சாதனை.
 
சென்ற வாரம் வெளியான தேவி முதல் மூன்று தினங்களில் 37.50 லட்சங்களை மட்டுமே வசூலித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. பிரபுதேவா, தமன்னா காம்பினேஷனுக்கு அதுவும் விடுமுறை நாளில் இது குறைவான வசூல். வரும் நாள்களில் அதிக வசூலை எதிர்பார்க்கலாம்.
 
விஜய் சேதுபதி நடித்துள்ள றெக்க, தேவிக்கு மேல். முதல் மூன்று தினங்களில் 65.72 லட்சங்களை வசூலித்துள்ளது. படம் சுமார் என்று விமர்சனங்கள் சொல்வதால் வார நாள்களில் வசூல் அதிகரிக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
 
எதிர்பார்த்தது போல ரெமோதான் முதலிடத்தில். றெக்க படத்தைவிட 150 காட்சிகள் அதிகமாக ரெமோ சென்னையில் ஓட்டப்பட்டுள்ளது. முதல் மூன்று தினங்களில் சென்னையில் மட்டும் 1.71 கோடியை படம் வசூலித்துள்ளது. அஜித், விஜய் படங்களுக்கு நிகரான ஓபனிங் இது. 
 
திங்கள், செவ்வாய், புதன் மூன்று தினங்களும் விடுமுறை என்பதால் ரெமோ முதல் பத்து தினங்களிலேயே சென்னையில் 5 கோடிகளை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.