செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : செவ்வாய், 5 மே 2015 (09:41 IST)

சினி பாப்கார்ன் - ரஞ்சித் இயக்கத்தில் கேங்ஸ்டராகும் ரஜினி

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி
 
என்னது ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியா? சந்தேகமாகதான் அந்த செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம். வதந்தி என்று நாம் நம்பிய விஷயத்தை, உண்மை என்று போட்டுடைத்துள்ளார் வெங்கட்பிரபு.
 
வெங்கட்பிரபுவின் முன்னாள் அசிஸ்டெண்ட்தான் ரஞ்சித். ரஜினியை அவர் இயக்கப் போவது தெரிந்ததும், நீ என்னை பெருமைப்பட வச்சிட்ட. வாட் ஏ மொமண்ட். லவ் யூடா. பின்னி பெடல் எடு என ட்விட்டரில் கூறியுள்ளார். 
ரஜினியை இயக்க ரஞ்சித்துக்கு வாய்ப்பு கிடைத்ததைதான் இப்படி பரவசமாக குறிப்பிட்டுள்ளனார் வெங்கட்பிரபு.
 
ரஞ்சித் ரஜினியை வைத்து இயக்கும் படம் ஜுன் அல்லது ஜுலையில் தொடங்கும் என்றும், குறுகிய கால தயாரிப்பாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்தப் படம் கேங்ஸ்டர் கதை என்றும், ரஜினி கேங்ஸ்டராக நடிப்பதாகவும் கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5 கோடின்னா அம்மணமாகவும் நடிக்க தயார்
 
இந்தி சினிமாவில் செக்ஸ் கலந்த த்ரில்லர் படங்களை தொடர்ச்சியாக தயாரிப்பவர்கள் ஏக்தா கபூர் மற்றும் மகேஷ் பட். நீலப்பட நடிகை சன்னி லியோனை சினிமா நடிகையாக்கி இன்று செலிபிரிட்டியாக அவரை உயரத்தில் தூக்கி வைத்ததும் ஏக்தா கபூர்தான்.
அரைகுறை நிர்வாணமாக சன்னி லியோனை பயன்படுத்தியது ஏக்தாவை உறுத்தியிருக்க வேண்டும். முழுநிர்வாணமாக அவரை வைத்து ஒரு படம் எடுக்கும் முடிவுடன் சன்னியை அணுகியிருக்கிறார். அதுக்கென்ன, ஐந்து கோடி தந்தால் அம்மணமாக நடிக்கிறேன் என்றிருக்கிறார் சன்னி.
 
ஆனானப்பட்ட ராதிகா ஆப்தேயே குறும்படத்தில் நிர்வாணமாக நடிக்கிறார். அதுவும் சொற்ப சம்பளத்துக்கு. சன்னி முன்னாள் நீலப்பட நடிகை. அவர் நிர்வாணமாக நடிக்க 5 கோடியா என்று நிர்வாண திட்டத்தையே ட்ராப் செய்திருக்கிறார் ஏக்தா.

லிங்காவை சமன் செய்த கங்கா
 
பேய்க்கும் லாரன்சுக்கும் அப்படியொரு பந்தம். ரிபெல் படம் தோல்வியடைந்த போது, அவரை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்களே கோடிக்கணக்கில் நஷ்டஈடு கேட்டனர். மனிதர்களால் கைவிடப்பட்ட லாரன்ஸை காஞ்சனா பேய் காப்பாற்றியிருக்கிறது.
தமிழில் காஞ்சனா 2 பேயாட்டம் ஆடுகிறது. மே 1 காஞ்சனா 2, கங்கா என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது. லிங்கா, ஐ படங்களின் ஆந்திரா ஓபனிங் கங்காவுக்கு கிடைத்திருக்கிறது. அந்தளவுக்கு அட்டகாசமான ஓபனிங்.
 
ரிபெல் படத்தின் தோல்வியை கங்கா கழுவி துடைத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முதல்முறையாக பேயை வைத்து சிரிப்பு காட்டியதற்கு பேய் தந்த வெகுமதிதான் இந்த வெற்றி.