செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : சனி, 5 செப்டம்பர் 2015 (12:01 IST)

மும்பை போலீஸ் - மற்றுமொரு புத்திசாலித்தனமான தழுவல்

2013 -இல் மும்பை போலீஸ் வெளியானது. ஹவ் ஓல்ட் ஆர் யூ திரைப்படத்துக்கு முன்னால் ரோஷன் ஆண்ட்ரூ இயக்கிய படம். பாபி - சஞ்சய் என்ற ரோஷனின் ஆஸ்தான கதாசிரியர்கள் திரைக்கதை எழுதியிருந்தனர்.


 

 
மும்பை போலீஸ் மூன்று போலீஸ் அதிகாரிகளைப் பற்றியது. ரகுமான், பிருத்விராஜ் மற்றும் ஜெய்சூர்யா. பாதை முக்கியமில்லை, சேர்கிற இடம்தான் முக்கியம் என்று அடாவடியாக திரியும் இந்த மூவர் அணியில், ஜெய்சூர்யா திடீரென்று கொல்லப்படுகிறார். அவரை கொன்றது யார் என்பதை கண்டறியும் பொறுப்பு பிருத்விராஜுக்கு அளிக்கப்படுகிறது. அவர் கொலைகாரனை கண்டுபிடித்தாரா என்பது கதை.
 
இந்தப் படம், பிருத்விராஜ் இரவில் காரில் சென்று கொண்டிருப்பதிலிருந்து தொடங்கும். தனது உயர் அதிகாரியான ரகுமானிடம், குற்றவாளியை கண்டு பிடித்ததாக கூறிய அடுத்த கணம் கார் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் பிருத்விராஜ் அனுமதிக்கப்படுவார்.
 
விபத்தில்அவரது நினைவுகள் மறந்து போகும். தான் விசாரணையில் கண்டுபிடித்த குற்றவாளி யார் என்பதே அவருக்கு தெரியாது. தனது அடையாளமும் தெரியாத நிலையில், ஏற்கனவே விசாரணை செய்த ஜெய்சூர்யாவின் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பிப்பார்.
 
இந்தப் படம், மர்டரர் என்ற படத்தின் தழுவல் என சொல்லப்பட்டது. மர்டரர் படத்திலும், முதல் காட்சியில் ஒரு போலீஸ் அதிகாரி மாடியிலிருந்து கீழே விழுந்து கோமாவுக்கு சென்றுவிடுவார். இன்னொரு அதிகாரி தலையில் காயத்துடன் கண்டெடுக்கப்படுவார். அவருக்கு ஷார்ட் டெர்ம் மெமரி பாதிப்பு தலையில்பட்ட காயத்தில் ஏற்படும்.
 
ஆரம்ப காட்சிகள் ஒன்றாக இருந்தாலும் மும்பை போலீஸும், மர்டரர் திரைப்படமும் வேறு. தழுவல் அல்ல.
 
அதேநேரம், ப்ரெஞ்சில் வெளியான, த ஃபோர்த் மேன் திரைப்படத்தை பாபி - சஞ்சய் புத்திசாலித்தனமாக தழுவியிருந்தனர். த போர்த் மேன் திரைப்படத்தில் மேஜர் ஒருவர் இரண்டு மாத கோமாவிலிருந்து விழித்தெழுவார். தலையில் குண்டு பாய்ந்ததால் அவருக்கு கோமா ஏற்பட்டிருக்கும். அவரது மகன் மற்றும் மனைவியும் கொல்லப்பட்டிருப்பார்கள்.
 
தான் யார், தன்னை யார் கொல்ல..
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க

முயன்றார்கள், மனைவி மகனை அவர்கள் கொலை செய்ய என்ன காரணம் என்பது தெரியாத நிலையில், ஒரு போலீஸ் அதிகாரி அவரது குடும்பத்தை கொலை செய்தவர்கள் குறித்த தகவலை மேஜருக்கு தருவார்.


 

 
அதை வைத்து அவர்களை மேஜர் சுட்டுக் கொல்வார். அவரது இந்த நடவடிக்கைக்கு அவரது நண்பர் என தன்னை அறிமுகப்படுத்தும் கர்னல் எதிர்ப்பு தெரிவிப்பார். ஒருகட்டத்தில், தான் கொலை செய்தவர்கள் தன்னையோ தனது குடும்பத்தையோ கொலை செய்யவில்லை, முன்னாள் நண்பரான போலீஸ் அதிகாரி தன்னை ஏமாற்றிவிட்டார் என்பது அவருக்கு தெரிய வரும்.
 
அவர் ஏன் அப்படி செய்தார், மேஜர், கர்னல், போலீஸ் அதிகாரி மூவருக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது சுவாரஸியமான முடிச்சு.
 
2007 -இல் வெளியான இந்தப் படத்தின் கதையை பெருமளவு கொண்டுள்ளது மும்பை போலீஸ். மூன்று அதிகாரிகள். ரகசியத்தை ஒரு வீடியோ மூலமாக தெரிந்து கொள்வது என பல இரண்டு படங்களிலும் உள்ளன. மும்பை போலீஸில் நண்பனின் மரணம் என்றால் இதில் மகன் மனைவியின் மரணம். இதில் எப்படி, மேஜரே தனது மனைவி, மகனை கொலை செய்தாரோ, அதேபோல் மும்பை போலீஸில் நண்பனை கொலை செய்தது பிருத்விராஜ்.
 
த ஃபோர்த் மேன் திரைப்படத்தின் சட்டகத்தில் வேறு கதையை பொருத்தி, போலீஸ்மலையாளத்துக்கு ஏற்ப பிரமாதமாக மாற்றியிருக்கிறார்கள் பாபி - சஞ்சய்.
 
புத்திசாலித்தனமான தழுவல்.