1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2017 (10:19 IST)

கடந்தவார படங்களின் வசூல் ஒரு பார்வை

சென்னை பாக்ஸ் ஆபிஸில் ஆங்கில, இந்திப் படங்களின் ஆதிக்கம் அதிகம். சென்ற வருடம் பல ஆங்கிலப்படங்கள் சென்னை  பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்தன. இரண்டாம், மூன்றாம் இடங்களில் இந்திப் படங்களை சகஜமாக பார்க்க முடிந்தது. இந்த வருடம் நிலைமை இன்னும் மோசம். ஆங்கில, இந்திப் படங்களே சென்னையில் அதிகம் வசூலிக்கின்றன.

 
அமீர்கானின் தங்கல் 4.5 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. இந்தவார பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்திருப்பது ஒரு  இந்திப் படம் என்பது கவலைதரும் விஷயம்.
 
சென்ற வார இறுதியில் பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக 1.14 லட்சங்களை மட்டும் வசூலித்துள்ளது. சென்ற  ஞாயிறுவரை அதன் சென்னை வசூல், 34 லட்சங்கள் மட்டும்.
 
துல்கர் சல்மான் நடிப்பில் சத்தியன் அந்திக்காடு இயக்கிய ஜோமொன்டெ சுவீசேஷங்கள் படம் சென்ற வார இறுதியில் 1.47  லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை சென்னையில் இப்படம் 17 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
 
மோகன்லால் நடித்துள்ள முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள் மலையாளப் படம் சென்ற வார இறுதியில் 5.26 லட்சங்களை  வசூலித்துள்ளது. கடந்த ஞாயிறுவரை இதன் சென்னை வசூல், 18.70 லட்சங்கள்.
 
சென்ற வாரம் வெளியான தமிழ்ப் படமான அதே கண்கள் வெள்ளி, சனி, ஞாயிறில் 21.37 லட்சங்களை தனதாக்கியுள்ளது.  மிகச்சுமாரான வசூல்.
 
ஹிர்த்திக் ரோஷன் நடித்துள்ள காபில் திரைப்படம் சென்ற புதன் கிழமை வெளியானது. வெள்ளி, சனி ஞாயிறில் இதன்  சென்னை வசூல், 38 லட்சங்கள். புதன், வியாழனையும் சேர்த்தால், 77.03 லட்சங்கள்.
 
இதுவரை முதலிடத்தில் இருந்த பைரவா இந்தவாரம் இரண்டாமிடத்துக்கு வந்துள்ளது. சென்ற வார இறுதியில் 45.27  லட்சங்களை வசூலித்துள்ள இப்படம் இதுவரை சென்னையில் 6.61 கோடிகளை வசப்படுத்தியுள்ளது.
 
இந்த வாரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது, இந்திப் படமான ஷாருக்கானின் ரயீஸ். சென்ற புதன் கிழமை வெளியான இந்தப்  படம் வெள்ளி, சனி, ஞாயிறில் 72.55 லட்சங்களை வசூலித்து அசத்தியுள்ளது. புதன், வியாழன் வசூலையும் சேர்த்தால், 1.25  கோடி.
 
பல தமிழ்ப் படங்களின் ஓபனிங்கைவிட இது அதிகம் என்பது முக்கியமானது.