Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கடந்தவார படங்களின் வசூல் - கலக்கும் போகன்

வியாழன், 9 பிப்ரவரி 2017 (17:00 IST)

Widgets Magazine

இந்தி, ஆங்கிலப் படங்கள் சென்னை பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்துவது பற்றி தொடர்ந்து பேசி வருகிறேnம். பிறமொழிப்  படங்களின் ஆதிக்கம் சென்னையில் இந்த வாரமும் தொடர்கிறது. பைரவா, போகன் போன்ற எதிர்பார்ப்புக்குரிய படங்கள் தவிர்த்து மற்ற படங்கள் சென்னை பாக்ஸ் ஆபிஸில் பிறமொழிப் படங்களின் முன் தோற்றுவிடுகின்றன.

 
மீடியாவின் பாராட்டைப் பெற்ற அதே கண்கள் சென்ற வார இறுதியில், அதாவது அப்படத்தின் இரண்டாவது வார இறுதியில் 3.5  லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. கடந்த ஞாயிறுவரை அதன் வசூல், 43.44 லட்சங்கள்.
 
அதேநேரம் ரயீஸ் சென்ற வார இறுதியில் 4.42 லட்சங்களை வசூலித்துள்ளது. இப்படம் இதுவரை 1.72 கோடியை  வசப்படுத்தியுள்ளது. இது துருவங்கள் பதினாறு படத்தின் சென்னை வசூலைவிட அதிகம்.
 
ஹிர்த்திக் ரோஷனின் காபில், சென்ற வார இறுதியில் 4.5 லட்சங்களை தனதாக்கியுள்ளது. கடந்த ஞாயிறுவரை அதன் சென்னை  வசூல், 1.13 கோடி. ஆறnவது இடத்தில் இருக்கும் பைரவா சென்ற வார இறுதியில் 6.12 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை  சென்னையில் அதன் வசூல், 6.98 கோடிகள். பைரவாவுக்கு இது அதிகம்.
 
ஜnக்கிசானின் குங்ஃபூ யோகா சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல், 11.83 லட்சங்கள். நானி,  கீர்த்தி சுரேஷ் நடித்த தெலுங்குப் படம், நீனு லோக்கல் சென்ற வாரம் வெளியானது. இதன் முதல் மூன்றுநாள் சென்னை வசூல்,  13.85 லட்சங்கள்.
 
ஆங்கிலப்படமான ரெசிடென்ட் ஈவில் - தி பைனல் சேப்டர் சென்ற வாரம் வெளியாகி முதல் மூன்று தினங்களில் சென்னையில்,  23.13 லட்சங்களை வசப்படுத்தியுள்ளது.
 
ஜெய்யின் எனக்கு வாய்த்த அடிமைகளும் சென்ற வாரமே வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல்,  33.53 லட்சங்கள். மிகவும் சுமாரான ஓபனிங். இதற்கு பாக்ஸ் ஆபிஸில் இரண்டாமிடம்.
 
முதலிடத்தில் போகன். அதிகம் எதிர்பார்ப்பில்லாமல் வெளியாகியும், கடந்த வியாழன் வெளியான படம், வெள்ளி, சனி,  ஞாயிறுகளில் 1.21 கோடியை தனதாக்கியுள்ளது. வியாழனையும் சேர்த்தால், 1.62 கோடி. இந்த வருடம் பைரவாவுக்கு அடுத்து  அதிக ஓபனிங் போகனுக்குதான்.
 
வரும் 9 -ஆம் தேதி சி3 வெளியாவதால் அடுத்தவார பாக்ஸ் ஆபிஸில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஓபிஎஸ் VS சசிகலா பதவிப் போர் - திரை நட்சத்திரங்கள் யார் பக்கம்?

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், வி.கே.சசிகலாவுக்கும் நடந்து வரும் அடுத்த முதல்வர் ...

news

ஆன்லைனில் சிங்கம்- 3: தெறிக்கவிட்ட தமிழ் ராக்கர்ஸ்!!

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் இன்று வெளிவந்த படம் எஸ் 3.

news

கொளஞ்சி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

‘மூடர்கூடம்’ படத்தின் இயக்குநர் நவீனின் தயாரிப்பில் அவரின் உதவியாளர் தனராம் சரவணன் ...

news

கடைசியில தனுஷ் பொறப்பயே பொய்யுனு சொல்லிட்டாங்களே!!

மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி ஆகியோர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன். அவர் ...

Widgets Magazine Widgets Magazine