1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2016 (15:53 IST)

கடந்த வாரம் படங்களின் வசூல் ஒரு பார்வை

மூன்றாவது வாரமாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது சிவகார்த்திகேயனின் ரெமோ. இரண்டாவது இடத்தை தேவி தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதில் ஆச்சரியம், ஒவ்வொரு வார இறுதியிலும் தேவியின் வசூல் அதிகமாகிக் கொண்டே போகிறது.

 
சமீபத்தில் மட்டுமல்ல எந்த காலத்திலும் டோனி - தி அன் டோல்ட் ஸ்டோரி படம் போன்று எந்த இந்திப் படமும் சென்னையில் வசூலித்ததில்லை. கடந்தவார இறுதியில் இப்படம் சென்னையில் 3.34 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல், 2.24 கோடிகள்.
 
விஜய் சேதுபதியின் றெக்கயால் தொடர்ந்து பறக்க முடியவில்லை. சென்ற வார இறுதியில் 5.15 லட்சங்களை மட்டுமே வசூலித்த இந்தப் படம் இதுவரை சென்னையில், 1.64 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது.
 
ஆங்கிலப்படமான இன்ஃபெர்னோ சென்ற வார இறுதியில் 7.16 லட்சங்களை வசூலித்துள்ளது. ஆங்கிலப் படத்துக்கு இந்த வார இறுதி வசூல் ஓகேதான். கடந்த ஞாயிறுவரை இதன் சென்னை வசூல், 48.70 லட்சங்கள்.
 
ஐஎஸ்எம்... இதுவொரு தெலுங்குப் படம் ஆந்திராவில் நல்ல வசூலை பெற்றுவருவதாக கேள்வி. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம், சென்னையில் முதல் மூன்று தினங்களில் 9 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
 
டாம் க்ரூஸ் நடித்த ஜாக் ரீச்சர் திரைப்படம் ஆக்ஷன் ப்hpயர்கள் மத்தியில் பிரபலம். அதன் இரண்டாம் பாகம் ஜாக் ரீச்சர் - நெவர் கோ பேக் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல், 35 லட்சங்கள்.
 
சென்னை பாக்ஸ் ஆபிஸின் இரண்டாவது இடத்தில் தேவி உள்ளது. முதல்வார இறுதியில் 37 லட்சங்களையும், இரண்டாவது வார இறுதியில் 43 லட்சங்களையும் வசூலித்த இந்தப் படம், மூன்றாவது வார இறுதியில் 47.61 லட்சங்களை வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. சென்ற ஞாயிறுவரை இதன் சென்னை வசூல், 2.11 கோடிகள்.
 
அதே முதலிடத்தில் ரெமோ. நாளானாலும் படத்தின் வசூல் ஸ்டெடியாகவே உள்ளது. சென்ற வார இறுதியில் 80.50 லட்சங்களை வசூலித்த படம், இதுவரை சென்னையில் மட்டும் 6.46 கோடிகளை தனதாக்கியுள்ளது. இந்த வருடத்தின் ப்ளாக் பஸ்டர் லிஸ்டில் கபாலி, தெறியுடன் ரெமோவும் இணைந்துள்ளது.