வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (12:43 IST)

கத்தியும் தமிழுணர்வு சத்தமும்

அனைவரும் எதிர்பார்த்த கத்தி பாடல்கள் வெளியீட்டு விழா எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நேற்று முடிந்தது. கத்தியின் தொலைக்காட்சி உரிமையை ஜெயா தொலைக்காட்சி வாங்கியதால் கத்தி யூனிட் எக்ஸ்ட்ரா பூஸ்ட் குடித்த எனர்ஜியுடன் இருந்தது. கத்திக்கு இனி எந்தப் பிரச்சனை வந்தாலும் அதிகார மையம் அதனை கவனித்துக் கொள்ளும்.
கத்தியை தயாரித்த லைகா நிறுவனமும் அதன் நிறுவனர் சுபாஸ்கரனும் ராஜபக்சேக்கு நெருக்கமானவர்கள் என்பதை முன்னிறுத்திதான் பிரச்சனை ஆரம்பித்தது. சில தினங்கள் முன்புவரை மௌனம் காத்த லைகா தரப்பு, கத்தியை ஜெயா தொலைக்காட்சி வாங்கியதும் தைரியமாக சவுண்ட்விட ஆரம்பித்தது. அவர்கள் பிரஸ்மீட் நடத்தியதே அந்த பின்புலத்தில்தான் என்கிறார்கள்.
 

கத்தி பாடல்கள் வெளியீட்டு விழாவில் விஜய் அடக்கத்தோடு கர்ஜித்தார் என்றால், முருகதாஸ் எகிறி அடித்தார். 7 -ஆம் அறிவு படத்திலேயே தமிழுணர்வை ஆறாக ஓடவிட்டவராயிற்றே.
விஜய்யின் சமீபத்திய பேச்சுகளில் ஒருவரி தத்துவங்கள் பளிச்சிடுகின்றன. உண்மைக்கு விளக்கம் தந்தால் பிரச்சனை தெளிவாகும், அதுவே வதந்திக்கு விளக்கம் தந்தால் வதந்தி உண்மையாகும் என்று பளீர் பஞ்ச் ஒன்று வைத்தார். லைகா பிரச்சனையில் இதுவரை எந்த விளக்கமும் விஜய் தரவில்லையே என்றவர்களை இந்த ஒருவரி பஞ்ச் வாயடைக்க வைத்திருக்கும்.
 

தமிழுணர்வையும் அவர் விடவில்லை. என்னை தியாகி என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் நான் துரோகி கிடையாது என்று இன்னொரு பஞ்ச் வைத்தார். கத்தி படத்தை எடுத்தது சண்டை போடுவதற்காக இல்லை, ரசிகர்கள் பார்த்து சந்தோஷப்படுவதற்காக என்றார்.
விழாவில் பேசிய முருகதாஸின் பேச்சில் எக்கச்சக்க காரம். நானும் பச்சை தமிழன்தான், எனக்கும் தமிழுணர்வு இருக்கிறது என்றார். இந்தியில் படம் இயக்கியது பற்றி குறிப்பிட்டவர், பணத்துக்காக இந்திக்கு போகவில்லை. சென்னையில் இருக்கிற ஒருத்தன், சென்னைன்னுகூட சொல்ல முடியாது. சென்னையிலிருந்து 200 கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற கிராமத்திலிருந்து வந்த ஒருத்தன், சரியா இங்கிலீஷ்கூட பேசத் தெரியாதவன் பாலிவுட்டில் கொடி நாட்டுவதா என்று பேசினார்கள். அந்த ஒரு காரணத்துக்காதான் இந்தியில் படம் செய்தேனே தவிர பணத்துக்காக இல்லை. எனக்கு தமிழ்ப் படங்கள் எடுப்பதுதான் பிடிக்கும். எனக்கும் தமிழுணர்வு இருக்கு. எனக்கும் தமிழ் ரத்தம்தான் ஓடுகிறது. நானும் சுத்த தமிழன்தான். நானும் விஜய்யும் எப்போதும் பணத்துக்கு பின்னாடி ஓடுறவங்க கிடையாது என்று பட்டாசு வெடித்தார்.
 

விழாவுக்கு எக்கச்சக்கமாக அழைப்பிதழ் அடித்து லீலா பேலஸில் ஏன் நடத்தினார்கள் என்பதுதான் புரியவில்லை.

விழா நடந்த ஹாலை தாண்டியும் கட்டுக்கடங்காத கூட்டம். கத்தியை எதிர்க்கும் அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் வேறு வெளியே களைகட்டியது. போலீஸ்காரர்கள் குவிக்கப்பட்டிருந்ததால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.
 
லைகா பிரச்சனையை ஒட்டி பலரது தமிழுணர்வு தூசி தட்டப்பட்டு மெருகேற்றப்பட்டது. தமிழுக்கும் அது நல்லதுதானே.

 
கத்தி டீஸர் அடுத்த பக்கத்தில்...
 

விஜய், சமந்தா நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி - டீசர்