செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (14:03 IST)

சென்றவார படங்களின் கலெக்ஷன் ஒரு பார்வை

சென்றவார படங்களின் கலெக்ஷன் ஒரு பார்வை

சென்ற வாரம் வெளியான படங்கள் தயாரிப்பாளர்களை சிரிக்க வைத்திருக்கின்றனவா இல்லை அழ வைத்திருக்கின்றனவா என்பதை சென்னை பாக்ஸ் ஆபிஸை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

 
சென்ற வாரம் வெளியான படங்களில் முக்கியமானது த்ரிஷாவின் நாயகி. த்ரிஷா நடித்திருக்கும் முதல் நாயகி மையத் திரைப்படம். பேய் படமான இது தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகி, தெலுங்கில் சில வாரங்கள் முன்பு வெளியானது. படம் அங்கு வெளியான சுவடே இல்லாமல் வந்த வேகத்தில் வெளியேறியது.
 
தமிழில் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் சென்னையில் 22.19 லட்சங்களை படம் வசூலித்துள்ளது. த்ரிஷா படத்துக்கு இது ஓகே. ஆனால், திங்கள் முதல் திரையரங்குகளில் கூட்டமில்லை என்பதால் நாயகி நஷ்டத்தையே சம்பாதிப்பாள் என்கிறார்கள்.
 
சென்ற வாரம் வெளியான இன்னொரு படம், கரணின் உச்சத்துல சிவா. இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் 3.88 லட்சங்களை வசூலித்து தயாரிப்பாளரின் நிலையை கவலைக்குரியதாக்கியிருக்கிறது.
 
சென்ற வாரம் வெளியான இன்னொரு தமிழ்ப் படம், சதுரம் 2. இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் 9.09 லட்சங்களை வசூலித்துள்ளது. ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் கிடாரி சென்ற வார இறுதியில் 2.7 லட்சங்களுடன் முடங்கியுள்ளது. இதுவரை சென்னையில் கிடாரி 1.90 கோடியை வசூலித்துள்ளது.
 
சென்ற வாரம் வெளியான அமிதாப், தாப்ஸி நடித்துள்ள பிங்க் இந்திப் படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் 25.27 லட்சங்களை வசூலித்து அசத்தியுள்ளது. 
 
இருமுகன் போட்டியில்லாததால் இந்த வாரமும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தப் படம் சென்ற வார இறுதியில் 1.05 கோடியை வசூலித்துள்ளது. ஞாயிறுவரை இதன் சென்னை வசூல் 4.80 கோடிகள். விக்ரம் படத்துக்கு இது ஜாக்பாட்.
 
அடுத்த வாரம் தொடரி, வீரசிவாஜி உள்ளிட்ட படங்கள் வெளியாவதால் பாக்ஸ் ஆபிஸில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.