வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2016 (12:34 IST)

சினி பாப்கார்ன் - பாலாவுக்கே இந்த நிலையா...?

ஸ்பேஸ்ல ஃபிலிம் காட்றோம்
 
ஸ்பேஸ்னா முகமில்ல... விண்வெளி. சக்தி சௌந்தர்ராஜன் கொஞ்சம் வித்தியாசமான ஆளு. நாயை வச்சு நாய்கள் ஜாக்கிரதை படத்தை எடுத்தவர், அடுத்து ஹாலிவுட்ல மட்டுமே புழங்கிட்டிருந்த ஸோம்பிக்களை வச்சு, மிருதன் படத்தை எடுத்தார். படம் எவ்வளவு மொக்கையா இருந்தாலும், ஒருவரி அரசியல் வசனமோ, அதுவரை எடுக்காத கதையோ இருந்தால், அதன் அத்தனை எதிர்மறை அம்சங்களையும், என்னதான் இருந்தாலும் புதிய கதையல்லவா என்றோ, அரசியல் வசனம் வேற எங்க வந்திருக்கோ என்றோ நியாயப்படுத்துறது தமிழக மக்களோட பெருங்குணம்.
 
மிருதன் படத்தையும் முதல் ஸோம்பி படம்னு ஜனம் ஏத்துகிச்சு. விளைவு...?
 
தன்னோட அடுத்தப் படத்தை விண்வெளியில நடிக்கிற மாதிரி எடுக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். அதுவும் த்ரில்லர் கதையாம். படத்தைப் பார்த்து ஏலியன்ஸ் பூமிக்கு இறங்காம இருக்கணும்.


 
 
கழுவி ஊத்தினாலும் கலெக்ஷன் செம...
 
கொலகார படமா எடுத்துத் தள்றார் சசிகுமார். கிடாரியும் அதுல சேர்த்தி. இப்படியெல்லாமா கிராமங்கள் இருக்கு, கொலையா பண்ணிட்டு இருக்காங்கன்னு சமூக பொறுப்போட விமர்சனங்கள் எழுதி கிடாரியை கழுவி கவுத்து 
 
வைக்கிறாங்க மீடியால. பட், தியேட்டர்ல...?
 
விமர்சகர்கள் கொண்டாடுற குற்றமே தண்டனைக்கு சென்னைல முப்பது லட்சம்கூட கலெக்ஷன் இல்ல, ஆனா கிடாரி ஒரு கோடியை முதல் மூணு நாள்ல சென்னையில் தாண்டியிருக்கு. இதுதான் நம்ம ஜனங்களோட ரசனை. 
 
சென்னையை மாதிரி கிடாரிக்கு சிட்டிக்கு வெளியேயும் நல்ல கலெக்ஷன். இதுக்கு மேல கொலகார ரூட்டை சசிகுமார் மாற்றுவார்ங்கிறீங்க...?
 
அகிராவும் அல்லக்கை விமர்சகரும்
 
முருகதாஸோட அகிரா வெள்ளிக்கிழமை வெளியாகி மொத ரெண்டு நாள்ல 10 கோடியை தாண்டி வசூலிச்சிருக்கு. ஞாயிறு வசூல் 6.20 கோடிகள். ஆக, மூணு நாள்ல 16.65 கோடிகள். படத்தோட பட்ஜெட் 30 கோடியில பாதியை மொத மூணு நாள்லயே கல்லா கட்டிடிச்சி.
 
இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதுன ஒரு இந்திக்காரர், படம் டுபாக்கூர்... கலெக்ஷனே ஆவாது... பணம் போட்டவன் பார்க்ல தலையில துண்டு போட்டு ஒக்காந்துக்க வேண்டியதுதான்னு எழுதியிருக்கார். தமிழன் படம்னா அவ்ளோ காண்டு. முக்கியமான விஷயம், படத்தோட தொலைக்காட்சி ஒளிபரப்பு, ஆடியோ ரைட்ஸுன்னு படம் ரிலீசாகிறதுக்கு முன்னாடியே பாதி பட்ஜெட்டை எடுத்திடுச்சி.
 
ஒரு நாயகி மையப்படம் இப்படியொரு ஓபனிங்கை பெற்றதே பெரிய விஷயம்தான். இந்திக்காரர்களே பாராட்டலைன்னாலும் விஷம் கக்காதீங்க.
 
பாலாவுக்கே இந்த நிலையா?
 
பாலா படம்னா அடிவாங்கவும் தயார்னு நடிகர்கள் வரிசைகட்டுன காலமெல்லாம் மலையேறிப்போச்சு. அடுத்தடுத்து ரெண்டு தோல்வி. அடிவாங்கறதுதான் மிச்சம்... படமும் ஓடாது பெயரும் கிடைக்காதுன்னு ஒரு மனநிலைக்கு நடிகர்கள் வந்திட்டாங்களோன்னு ஒரு அச்சம்.
 
குற்றப் பரம்பரையை படமாக்கப் போறேன்னு இன்டஸ்ட்ரியில் பாதி பேரு அதில் நடிக்கிறதா சொன்னார் பாலா. ஆனா, கால்ஷீட் பிராப்ளம், புராஜெக்ட் கேன்சல். சரி, தனி ஹீரோவை வச்சு ஒரு படம் பண்ணலாம்னா சூர்யா முதற்கொண்டு எல்லோரும் ஓடி தப்பிக்கிறாங்க. 
 
கடைசியா கிடைச்ச தகவல், சிம்புவை வைத்து படம் எடுக்க முயற்சி செய்யறாராம் பாலா. 
 
பாலா படத்தை மூணு வருஷம் எடுப்பார்னா, சிம்பு படுத்தியே மூணு வருஷம் படத்தை இழுப்பாரு... ம், செம 
 
காம்பினேஷன்...