வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : புதன், 6 ஜூலை 2016 (13:45 IST)

சினி பாப்கார்ன் - யார் கிட்டேயும் சொல்லிடாதீங்க....

சினி பாப்கார்ன் - யார் கிட்டேயும் சொல்லிடாதீங்க....

அட, அப்படியா...?
 
ஒரு படத்தை தொடங்கினால் விடுமுறை, சுற்றுலா என்றெல்லாம் நேரத்தை வீணடிப்பவர் அல்ல இளைய சேனாதிபதி. வழக்கத்துக்கு மாறாக தனது 60 -வது படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கையில் யுஎஸ்ஸுக்கு கிளம்பினார். திடீர் பயணம் என்பதால் படயூனிட் திணறிப் போனது என்கிறார்கள். போட்ட ஷெல்யூல்டை மாற்ற வேண்டுமே.
 
இயக்குனர், சொன்ன பட்ஜெட்டைவிட அதிகம் செலவளித்து வருவதால் தயாரிப்பு தரப்பு முகத்தை காட்டியிருக்கிறது. அதனை விரும்பாத சேனாதிபதி தனது அதிருப்தியை காட்டவே யுஎஸ் பயணமானார் என்கிறார்கள்.
 
உண்மையா பாஸ்...?


 

ஓ... யூ டர்னா...?
 
உலக அழகியைப் போல் ராயில்தான் முடியும் அந்த லட்சுமிகரமான நடிகையின் பெயரும். அந்த பெல்காம் அழகியின் பெயரிலேயே ஒரு கிக் இருந்தது. 
 
ஆனால், முன்னணி நடிகர்கள் ஊறுகாயைப் போலத்தான் பயன்படுத்துகிறார்கள், கனவுப் பிரதேசமான பாலிவுட்டில் ஒரு வாய்ப்புகூட வரவில்லை என்று தனது பெயரை மாற்றினார். ராய் முன்னால் செல்ல லட்சுமிகரம் பின்னால் வந்தது. 
 
பெயரை மாற்றிய பிறகு அவ்வப்போது வந்த வாய்ப்புகளும் இல்லை. அதனால் மீண்டும் பெயரை மாற்றலாமா என்று யோசித்து வருகிறார் நடிகை.


 
 
 

புத்த இயக்குனரிடத்தில்தான் குத்தம்
 
புத்த இயக்குனர் படம் இல்லாமல் பைசாவுக்கு தத்தளித்த போது, வம்பு நடிகரை சரணடைய, அவரும் பெரிய மனது செய்து கால்ஷீட் தந்தார். அந்தப் படம்தான் பயம் கொள்வது மடமையாக வளர்ந்து நிற்கிறது. நடிகர் இயக்குனருக்கு வாய்ப்பளித்த போது பாப்பராக இருந்தார் இயக்குனர். இப்போது பல படங்கள் தயாரிக்கிற அளவுக்கு இயக்குனரிடம் விட்டமின் பா உள்ளது. அதனால், பேசிய சம்பளத்தை கேட்கிறார் நடிகர். முடியாது என்று இழுத்தடிக்கிறார் இயக்குனர்.


 
 
இந்த விஷயத்தில் வம்பு நடிகரிடம் எந்த குற்றமும் இல்லை, எல்லா குற்றமும் இயக்குனருடையது என்கிறார்கள்.
 
பிகினிக்கு காதலன் தடை...?
 
எதற்கும் தயார் என்று களம் இறங்கிய நயன நடிகை இப்போதெல்லாம் காஸ்ட்யூம் விஷயத்தில் கறார் காட்டுகிறார். தல நடித்த ஸ்டார்ட்டிங் படத்தில்கூட பிகினி அணிந்து தமிழகத்தின் பிபி எகிற வைத்தவருக்கு என்னவாயிற்று என்று விசாரித்தால், பின்னணியில் காதலன் இருக்கிறார்.


 
 
சிவனே என்றிருக்கும் இயக்குனரும் நடிகையும் காதலித்து வருகிறார்கள் அல்லவா. இந்தமுறை காதலை எப்படியாவது தள்ளிப் போய் கல்யாணம் என்கிற கோல் போஸ்டில் அடிப்பது என்பதில் இருவருமே தீவிரமாக உள்ளனர். அதனால், காஸ்ட்யூம் விஷயத்தில் சிக்கனம் வேண்டாம் என்றிருக்கிறார் காதலர். நடிகையும் டபுள் ஓகே சொல்லியிருக்கிறார்.
 
காதலன்னா கொஞ்சம் கஞ்சத்தனம் இருக்கத்தானே செய்யும்.