வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : புதன், 29 ஜூன் 2016 (13:26 IST)

சினி பாப்கார்ன் - அஜித்தை முந்திய சிவகார்த்திகேயன்... ஐங்கரன் போட்ட ஆட்டம் பாம்

சினி பாப்கார்ன் - அஜித்தை முந்திய சிவகார்த்திகேயன்... ஐங்கரன் போட்ட ஆட்டம் பாம்

அசப்பில் அப்பா போலவே இருக்காரே...


 
 
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பட வேலைகளில் சிம்பு வழக்கம் போல் சோம்பல் காட்டுகிறார், அதனால் ஆதிக் ரவிச்சந்திரன் ஜீ.வி.பிரகாஷை வைத்து வெர்ஜின் மாப்ள படத்தை இயக்கப் போகிறார் என்று சிலர் வதந்தி கிளப்பிய நேரம், அதனை மறுப்பது போல் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு படத்தை வெளியிட்டார். மூன்று கெட்டப்புகளில் அவரது படத்தில் நடிக்கும் சிம்புவின் ஒரு கெட்டப்தான் அது.
 
நீள முடி, அடர்ந்த தாடி என்று அசப்பில் அப்பா டி.ஆரை போலவே இருக்கிறார் சிம்பு. எண்பதுகளில் நடப்பது போல் படத்தில் ஒரு எபிசோட் வருகிறதாம். அதில் சிம்பு தாதாவாக நடிப்பதாக தகவல். அந்த ரஃப் லுக்தான் இந்த தலைமுடி தாடி சமாச்சாரம்.
 
படத்தில் 3 நாயகிகள். இன்னும் ஒருவரைகூட முடிவு செய்யவில்லை என்பது அடிகோடிட்டு சொல்ல வேண்டிய விஷயம்.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்க.......

நினைச்சதை சாதிச்ச சண்டக்கோழி


 
 
சண்டக்கோழி இரண்டாவது பாகம் எடுக்கலாம் என்று ஒருபுறம் பேசிக் கொண்டே, அல்லு அர்ஜுனை வைத்து தமிழ், தெலுங்கில் படம் இயக்க ஆயத்தமானார் லிங்குசாமி. அடுத்தவர் பிரச்சனைக்கே ஆ ஊ என்று களத்தில் இறங்கும் விஷால் சொந்தப் பிரச்சனையை சுலபமாக விட்டுவிடுவாரா?
 
என்னை வச்சு படம் செய்றேன்னு பல மாசங்கள் காத்திருக்க வைத்துவிட்டு இப்போது வேறு ஒருவரை வைத்து படம் செய்வதா? சில இயக்குனர்களுக்கு தொழிலில் டெடிகேஷனே இல்லை என்று இணையத்தில் லிங்குசாமியை பெயர் குறிப்பிடாமல் தாளித்ததோடு சங்கத்தில் புகாரும் செய்தார்.
 
இந்த நேரம் லிங்குவுக்கு தெலுங்கு புராஜெக்டில் ஏதோ பிரச்சனை. மீண்டும் விஷாலோடு பேசி சமாதானமாகியிருக்கிறார். முதலில் சண்டக்கோழி இரண்டாம் பாகம், அடுத்து அல்லு அர்ஜுன் படம் என்று லிங்கு இறங்கிவர, ட்விட்டாpல் சூப்பர் சூப்பர் என்று ஒரேயடியாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் விய்ல்.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்க....

மீண்டும் இமானுடன் இணைந்த சுசீந்திரன்


 
 
சுசீந்திரனின் முதல்படம் வெண்ணிலா கபடிக்குழுவுக்கு இமான்தான் இசை. அதன் பிறகு யுவனுடன் பணிபுரிந்த சுசீந்திரன், யுவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் ஜீவா படத்தில் மீண்டும் இமானுடன் கூட்டணி அமைத்தார். இப்போது மீண்டும் இவர்கள் இணைந்திருக்கிறார்கள்.
 
சுசீந்திரன் விஷ்ணுவை வைத்து இயக்கும் படத்துக்கு இமான் இசையமைக்கிறார். மஞ்சிமா மோகன் நாயகி. இந்தப் படத்தில் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடிக்க சூரி காமெடி ஏரியாவை கவனிக்கிறார்.
 
அடுத்த மாதம் திண்டுக்கல்லில் படப்பிடிப்பை தொடங்குகின்றனர்.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்க.....

அஜித்தை முந்திய சிவகார்த்திகேயன்


 

 
தமிழகத்தில் அஜித் ஓபனிங் கிங். ஆனால், பிற மாநிலங்களில், வெளிநாடுகளில் அப்படியில்லை. கேரளாவில் விஜய் படம் என்றால் விழுந்து கும்பிடுகிறார்கள். அதில் பாதி வரவேற்பு அஜித்துக்கு இல்லை. ஆந்திரா, கர்நாடகாவிலும் இதுதான் நிலைமை. வெளிநாடுகளிலும் அதுதான் நிலவரம் என்று ஐங்கரன் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரம் கூறுகிறது.
 
வெளிநாட்டு உரிமையில் ரஜினி படங்களே முதலிடத்தில் உள்ளன. ரஜினி படங்களின் சராசரி வெளிநாட்டு விற்பனை 30 கோடிகள். அடுத்த இடத்தில் விஜய், 22 கோடிகள். மூன்றாவதாக சூர்யா, 20 கோடிகள். கமல் நான்காவதாக வருகிறார். அவரது படங்கள் 15 கோடிகளுக்கு விலை போகின்றன. 
 
அடுத்த இடத்தில் - அதாவது ஐந்தாவது இடத்தில் சிவகார்த்திகேயன். 10 கோடிகள். இவருக்குப் பிறகே அஜித் வருகிறார். அஜித்தின் படங்களுக்கு எட்டு கோடிகளே வெளிநாட்டு மதிப்பு உள்ளது. 
 
ஐங்கரன் வெளியிட்ட இந்த புள்ளி விவரம், இணையத்தில் ஆட்டம் பாமாக வெடித்துள்ளது. நேற்று வந்த சிவகார்த்திகேயனையே தோற்கடிக்க முடியாத அஜித், இளைய தளபதிக்கு போட்டியா என்று விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் அஜித் ரசிகர்களை கிண்டல் அடித்து வருகின்றனர்.