வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : புதன், 29 ஜூன் 2016 (11:07 IST)

சினி பாப்கார்ன் - தமிழ்நாட்டை தவிக்கவிட்ட நடிகர்கள்

விக்ரம் படத்தில் நயன்தாரா
 
நயன்தாரா ஆல்மோஸ்ட் அனைவருடனும் நடித்துவிட்டார். கமல், விக்ரம் என்று ஒன்றிரண்டு நடிகர்கள் தான் பாக்கி. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் அவருடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், நயன்தாரா.


 
 
ஆனந்த் சங்கரின் முதல் படம் அரிமா நம்பியை தாணு தயாரித்தார். அடுத்தப் படத்தையும் தாணுவுக்கே இயக்கித் தருவதாக ஆனந்த் சங்கர் ஒப்புக் கொண்டிருந்தார். அவரும் விக்ரமிடம் கதை சொல்லி, படத்தை இயக்க தயாரானார். விஜய், ரஜினி படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருவதால் தாணுவால் உடனடியாக ஆனந்த் சங்கரின் படத்தை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், தாணு விலகிக் கொள்ள ஐங்கரன் படத்தை தயாரிக்க முன்வந்தது. விக்ரமின் 10 எண்றதுக்குள்ள தோல்வி அடைந்ததால் ஐங்கரன் படத்தயாரிப்பிலிருந்து விலகிக் கொண்டது.

இந்நிலையில், புலி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன்ஸ் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொங்குகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் விக்ரமுடன் நயன்தாரா, பிந்து மாதவி ஆகியோர் நடிக்கின்றனர். பிற விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்.....

தமிழ்நாட்டை தவிக்கவிட்ட நடிகர்கள்
 
ஆந்திராவில் புயல் மழையில் மக்கள் பாதிக்கப்பட்ட போது நடிகர் சூர்யா 25 லட்சங்கள், விஷால் 5 லட்சங்கள், கார்த்தி 10 லட்சங்கள் என்று பெரும்பாலான நடிகர்கள் உதவி செய்தனர்.


 


இன்று தமிழ்நாட்டின் வடக்கு மாநிலங்கள் தண்ணீரில் மிதிக்கின்றன. லாரன்ஸ், சிம்பு, விஷால், விஜய் போன்ற ஒன்றிரண்டு நடிகர்கள் உணவு பொட்டலங்கள் போன்ற சின்னஞ்சிறு உதவிகள் செய்தனரே தவிர, ஆந்திராவுக்கு உதவியது போல் லட்சங்களில் யாரும் இதுவரை உதவித் தொகை வழங்கவில்லை. நடிகர்களின் இந்த பாரபட்சம் தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்றதும், தமிழக மக்களின் காவிஷா, ஈழம் போன்ற பிரச்சனைகளில் நடிகர் சங்கம் தலையிடாது, போராட்டம் நடத்தாது என்று அறிவித்தனர். இந்த அறிவிப்பு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மக்களுக்கு லட்சங்களில் உதவி செய்த நடிகர்கள் எச்சக்கையை கூட தமிழக மக்களுக்காக ஆட்டவில்லையே என்று கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்......

ஆந்திராவுக்கு பஸ்ஸு... தமிழகத்துக்கு புஸ்ஸா...?
 
ரஜினி சம்பந்தப்பட்ட செய்தி என்றால் எப்போதும் ஸ்பெஷல்தான். நல்ல விஷயமாக இருந்தாலும் கெட்ட விஷயமாக இருந்தாலும்.


 
 
ஆந்திராவுக்கு புதிய தலைநகரம் அமைக்கும் அடிக்கல் நாட்டு விழாவுக்கு இலவச பேருந்து வசதி செய்து தந்தார் ரஜினிகாந்த். அது ஒன்றும் அத்தியாவசியமான உதவியல்ல. அதேநேரம், தமிழக மக்கள் இன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தலைவர் சொந்தச் செலவில் ஒரு பைபர் போட்டாவது அனுப்பியிருக்கலாம். ஆனால், எங்கயோ யாருக்கோ என்பது போல் இன்னும் கண்டு கொள்ளாமலே இருக்கிறார். விமர்சனங்கள் தீவிரமாகும் போது தலைவர் உதவிகூட செய்யலாம். ஆனால், இவையெல்லாம் கேட்காமலே செய்யக் கூடிய உதவியல்லவா? யாரும் கேட்காமலே ஆந்திரா தலைநகர் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு பேருந்து வசதி செய்துத் தந்தவர், தமிழக வெள்ளப் பாதிக்கு இன்னும் சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லையே. இது நாம கேட்கலீங்க, மக்கள் பேசிக்கிறாங்க.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்......

கத்திக்கு இந்தியில் கிடைத்த விமோசனம்
 
கத்தி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய தலைகீழாக நின்றனர். சமீபத்தில் விஜய் நடித்தப் படங்களில் கத்திதான் பெஸ்ட். ஆனால் அதன் ரீமேக்கில் நடிக்க மாட்டேன் என்று கழன்று கொண்டார் மகேஷ் பாபு. இப்படி ஆந்திராவில் எடுபடாமல் போன கத்தி ரீமேக், இந்தியில் சாத்தியமாகியிருக்கிறது.


 


முருகதாஸின் உதவி இயக்குனர் ஜெகன் கத்தி இந்தி ரீமேக்கை இயக்குகிறார். அக்ஷய் குமார் இந்த ரீமேக்கில் நடிக்க, லைக்கா ரீமேக்கை தயாரிக்கிறது. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய் நடித்தார். இப்போது மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தியின் ரீமேக்கில் நடிக்கிறார். முன்னதை முருகதாஸே ரீமேக் செய்தார். கத்தியை முருகதாஸின் உதவி இயக்குனர் ரீமேக் செய்கிறார். இந்த ரீமேக்கின் மூலம் இந்தியில் கால் பதிக்கிறது லைக்கா நிறுவனம்.