வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By Geetha Priya
Last Updated : வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (12:08 IST)

சினி பாப்கார்ன் - விஜய்யின் தாராளம்

அட... சுரேஷ் கோபியும் அப்செட்டாமே...?
 
ஐ பாடல்கள் வெளியீட்டு விழாவில் ரஜினி வெளிப்படுத்திய அதிருப்தியையும், அர்னால்ட் நடத்திய வெளிநடப்பையும் இன்னும் பக்கம் பக்கமாக பேசிக் கொண்டிருக்கின்றன ஊடகங்கள். இதில் சுரேஷ் கோபியையும் இழுத்து விட்டிருக்கிறது ஒரு குரூப்.
என்னவாம்?
 
ஐ படத்தில் நான்தான் மெயின் வில்லன் என்று எல்லா பேட்டிகளிலும் தவறாமல் கூறி வந்தார் சுரேஷ் கோபி. அப்பேற்பட்டவர் ஐ ஆடியோ விழாவில் கலந்து கொள்ளவில்லை.

ஆப்சென்ட். ஐ யூனிட்டுக்கும், சுரேஷ் கோபிக்கும் இடையில் மனஸ்தாபம், அதனால்தான் அவர் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்கிறார்கள்.
 
காரணம் உண்மையா என்பதை சுரேஷ் கோபிதான் சொல்ல வேண்டும்.
 

ஆந்திராவில் சங்கத்து பேரு கரண்ட் டீகா
 
நாலு காசு வசூலித்த படம் என்றால் ரீமேக் உரிமைக்கு ஒரே அடிதடிதான். வருத்தப்படாத வாலிபர் சங்கம் தமிழில் ஒரு மாஸ் ஹீரோவை உருவாக்கிய படம். ஆந்திராவாலாக்கள் விடுவார்களா?

கடும் போட்டி. கடைசியில் மோகன் பாபுவின் மகனுக்கு - மஞ்சு மனோஜ் - அடித்தது யோகம். அவர்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார். படத்துக்கு கரண்ட் டீகா என்று பெயர் வைத்துள்ளனர்.
 
படத்தில் காட்சிக்கு காட்சி ஜொள்ளு பீய்ச்சியடிக்கும். தெலுங்கு ரசிகர்களுக்கு எதுவாக இருந்தாலும் எக்ஸ்ட்ரா லார்ஜ்தான். அதனால் பிந்து மாதவி நடித்த டீச்சர் வேடத்தில் சன்னி லியோனை நடிக்க வைக்கப் போகிறார்களாம்.
 
அப்போ ஒரு குத்துப் பாட்டு கன்ஃபார்ம்.
 

விஜய்யின் தாராளம்
 
பிறந்த நாளில் பென்சில் தருகிறவர் என்று விஜய்யின் நற்பணியை நக்கலடிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாயை 25 லட்ச ரூபாயால் அடைத்திருக்கிறார் இளைய தளபதி. 
இயக்குனர்கள் சங்கத்தின் நலனுக்காக 25 லட்சங்கள் நன்கொடையாக தந்துள்ளார் விஜய். இதுவரை எந்த நடிகரும் இவ்வளவு பெரிய தொகையை இயக்குனர்கள் சங்கத்துக்கு தந்ததில்லை. சங்க நிர்வாகிகள் திக்குமுக்காடி போயுள்ளனர். 
 
கத்தி பிரச்சனையில் இயக்குனர்கள் சங்கம் - குறிப்பாக இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் விஜய் தரப்பை ஆதரித்து பேசியது விஜய்யை ரொம்பவே இளக வைத்தது. இப்போது விஜய்யின் தாராளத்தால் இயக்குனர்கள் சங்கமே நெகிழ்ந்து போயுள்ளது.
 

த ட்ராப் (The Drop)
 
புல்ஹெட் படத்தை இயக்கிய மைகேல் ஆர். ராஸ்கமின் இரண்டாவது படம், த ட்ராப். டாம் ஹார்டி நடித்துள்ள இப்படம் சென்ற வாரம் வெளியானது.

படம் பார்த்த அனைவரும் சொன்ன ஒரே வார்த்தை, அற்புதம். அற்புதமான படங்கள் எல்லாம் அமெரிக்காவிலும் அற்பமான வசூலையே பெறும் போல. முதல் மூன்று தினங்களில் 4.1 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
 
நல்ல படம் என்பதால் இந்தியாவில் வெளியாகிற வாய்ப்பு குறைவு. டிவிடி கிடைத்தால் வாங்காமல் விடாதீர்கள்.