வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By Geetha Priya
Last Updated : புதன், 20 ஆகஸ்ட் 2014 (12:42 IST)

சினி பாப்கார்ன் - இவர்தாண்டா இயக்குனர்

இவர்தாண்டா இயக்குனர்
 
சென்ற வருடத்தின் சென்சேஷனல் ஹிட் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம். தெலுங்கு, கன்னடத்தில் அதனை ரீமேக் செய்து அங்கேயும் ஹிட்டானது. விரைவில் கமல் நடிப்பில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. ஒரு படம் பல மொழிகளில் ஒரேவிதமான வரவேற்பை பெறுவது அபூர்வம்.
இந்தப் படத்தை மம்முட்டியை வைத்து பண்ணலாம் என்று அவரை அணுகினார் ஜீத்து ஜோசப். கதையை கேட்ட மம்முட்டிக்கு நாம் சரிவர மாட்டோம் என்று தோன்ற, ஸாரி முடியாது என்றிருக்கிறார். ஜீத்து ஜோசப்பின் அடுத்த சாய்ஸ் மோகன்லால். அவரும் முடியாது என்றால் ஜெயராமை வைத்து எடுப்பது என்ற முடிவுடன், மோகன்லாலை பார்க்கப் போவதற்கு அடுத்த நாள் ஜெயராமிடமும் அப்பாயின்மெண்ட் வாங்கியுள்ளார்.
 
மோகன்லாலை சந்திக்க அவரது மேனேஜர் அவ்வளவு எளிதில் அனுமதிக்கவில்லை. புதிய படமாட? 2017 வரை சாரோட கால்ஷீட் ஃபுல் என்றிருக்கிறார். சரி, அவரைப் பார்த்து கதையை மட்டும் சொல்றேன் என்றிருக்கிறார் ஜீத்து ஜோசப். எந்த கதையா இருந்தாலும் 2017 -க்குப் பிறகுதான். பிடிவாதமாக இருந்துள்ளார் மேனேஜர். ஜீத்து ஜோசப்பின் பொறுமை கழன்றது.
நான் ஒரு டைரக்டர். மோகன்லாலை பார்த்து கதை சொல்ல வந்திருக்கேன். அவர் 2017 ல் படம் பண்றதா இருந்தால் அதுவரை வெயிட் பண்றதா வேண்டாமான்னு தீர்மானிக்க வேண்டியது நான். கதையே சொல்லக் கூடாதுன்னு தடுக்க நீ யார்....? ஜீத்து ஜோசப்பின் சத்தம் கேட்டு வெளியே வந்திருக்கிறார் மோகன்லால். ஜீத்து ஜோசப் விஷயத்தை சொல்ல அங்கேயே கதை கேட்டிருக்கிறார்.
 
கதை முடிந்ததும் மேனேஜரை அழைத்த மோகன்லால், தனது அனைத்து புராஜெக்டையும் நிறுத்தி வைக்க சொல்லிவிட்டு, நாம் முதலில் பண்ணப் போறது ஜீத்துவோட படம் என்றிருக்கிறார்.
 
தனது ஸ்கிரிப்டின் மீதிருந்த நம்பிக்கைதான் ஜீத்து ஜோசப்பை சத்தம் போட வைத்தது. இயக்குனர்களுக்கு தேவை இப்போது இந்த தில்தான்.
 

டேவிட் பெல்லியின் பிரிக் மேன்ஷன்
 
கார் விபத்தில் பலியான பால் வால்கரின் நடிப்பில் இந்த வருடம் பிரிக் மேன்ஷன் படம் வெளியானது. படத்தில் உடன் நடித்திருந்தவர் டேவிட் பெல்லி. லுக் பெஸானின் திரைக்கதையில் உருவான இந்தப் படத்தின் ஒரிஜினல் பிரெஞ்சில் வெளியான டிஸ்ட்ரிக்ட் 13 -சுருக்கமாக டி 13 - படத்தின் தழுவல். இந்தப் படத்தின் கதையையும் லுக் பெஸானே எழுதியிருந்தார். 
பால் வால்கர், லுக் பெஸான், டேவிட் பெல்லி மூவருமே முக்கியமானவர்கள்தான் என்றாலும் டேவிட் பெல்லி பலராலும் அறியப்படாத ஓர் ஆளுமை. கட்டடங்களில் தாவிச் செல்லும் பார்கர் என்ற விளையாட்டு குறித்து பார்த்தும், கேள்விப்பட்டும் இருப்பீர்கள். இதன் தந்தை என்று அழைக்கப்படுகிறவர் டேவிட் பெல்லி. உண்மையில் டேவிட் பெல்லியின் தந்தைதான் இந்த விளையாட்டை அறிமுகப்படுத்தினார்.  பிரெஞ்ச் ராணுவத்தில் பணிபுரிந்த அவர் அங்கு தரப்பட்ட பலதரப்பட்ட பயிற்சிகளை ஒருங்கிணைத்து இந்த பார்கர் என்ற விளையாட்டை உருவாக்கினார். அதனை உச்சத்துக்கு கொண்டு சென்றவர் டேவிட் பெல்லி. இணையத்தில் அவர் வெளியிட்ட வீடியோவைப் பார்த்த லுக் பெஸான் டி 13 படத்துக்காக அவரை அணுகி, அவரது திறமையையே பிரதானமான கதாபாத்திரமாக்கி படத்தை எடுத்தார். அதன் ரீமேக்கான பிரிக் மேன்ஷனிலும் டேவிட் பெல்லியே நடித்தார். 
 
படம் எப்படி? 
 
பிரெஞ்ச் ஒரிஜினலின் அருகில் இந்த ஹாலிவுட் படத்தால் வர முடியாது. டி 13 ஓபனிங் காட்சியே நம்மை எங்கேயோ கொண்டு செல்லும். எப்போதுமே ஒரிஜினல் ஒரிஜினல்தான்.
 

அப்படியா... உண்மையா... சத்தியமா...?
 
பிரகாசமான ஹீரோவின் படத்தை இணையத்தில் திட்டமிட்டே வறுக்கிறது ஒரு டீம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வ வைத்த யார் அவர்கள்? யாராக இருந்தாலும் அவர்கள் சூது வாது அறியாத குமாரசாமிகள் அல்ல. ஒரு படத்திலிருந்து கதையை உருவினால் தெரிந்துவிடும்.

நாலு படத்திலிருந்து எடுத்தால் யாருக்கும் தெரியாது என்ற கொள்கையுடன் இயங்கி வரும் அந்த இயக்குனரின் இரண்டாவது படத்தில்தான் பிரகாச ஹீரோ நடிப்பதாக இருந்தது. அதுவொரு கொரியன் படம். முறைப்படி கொரிய இயக்குனரிடம் அனுமதியும் வாங்கியிருந்தார். 
 
படம் பிடித்தாலும் கொரிய படத்தின் தழுவல் என்பதால் பிரகாச ஹீரோ நடிக்க மறுத்தார். தவிர புத்த இயக்குனரையும் கழற்றிவிட்டார். இரண்டு பேரை அந்தரத்தில் விட்டு அவர் தேடி கண்டுபிடித்த கதை அச்சமில்லாதவன் என்பதால்தான் இணையத்தில் குமாரசாமி அண்ட் கோ ஓட்டு ஓட்டென்று ஓட்டுகிறது. 
 
நாலு படத்திலிருந்து உருவிதான் அடுத்தப் படத்தின் ஸ்கிரிப்டையும் இவர் தயார் செய்திருப்பதாக கேள்வி.