1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வெள்ளி, 2 அக்டோபர் 2015 (14:59 IST)

இந்த வருடம் வெளியாகும் எதிர்பார்ப்புக்குரிய படங்கள் - வேதாளம் முதல் விசாரணைவரை

இந்த வருடம் முடிய மூன்று மாதத்திற்கும் குறைவான நாள்களே உள்ளன. லிங்கா, உத்தம வில்லன் போன்ற படங்களின் தோல்வி தமிழ் திரையுலகின் கசப்பான அனுபவங்கள்.
 
அதனை களைவது போல் ஒரு மாபெரும் வெற்றி இதுவரை சாத்தியப்பட வில்லை. தனி ஒருவன் மட்டும் ஆறுதளித்தது.
 
இன்னொருபுறம் காக்கா முட்டை, குற்றம் கடிதல், கிருமி போன்ற படங்கள் நம்பிக்கையையும், அவற்றின் வசூல் அவநம்பிக்கையையும் தந்தன. காக்கா முட்டை மிகப்பெரிய வெற்றி என்று சொன்னாலும், அதன் ஒட்டு மொத்த வசூல் தனி ஒருவனின் இரண்டு நாள் வசூலைவிட குறைவு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
தமிழ் சினிமா இந்த வருடம் எதிர்பார்க்கும் படங்கள் என ஒருசிலவே உள்ளன. 
 
வேதாளம்


 

 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம். வழக்கமான இன்னொரு அஜித் படம் என்று அனைவரும் எண்ணியிருந்தபோது, வேதாளம் என்ற பெயரும், அஜித்தின் கெட்டப்பும், அட போட வைத்து அனைவரையும் நிமிர்ந்து உட்கார வைத்தது.
 
வீரம் படத்தைவிட இதில் அதிகம் எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை பர்ஸ்ட் லுக் ஏற்படுத்தியிருக்கிறது. தீபாவளிக்கு வேதாளத்தைப் பார்க்கலாம் என்று அஜித் ரசிகர்கள் இப்போதே உற்சாகத்தில் உள்ளனர்.
 
10 எண்றதுக்குள்ள
 
கோலி சோடாவை இயக்கிய விஜய் மில்டனின் படம் என்பதால் 10 எண்றதுள்ள படத்துக்கு இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. விக்ரம் நடித்திருக்கிறார் என்பது கூடுதல் பலம்.


 

 
தமிழில் அதிகம் எடுக்கப்படாத ரோடு மூவி வகையைச் சேர்ந்த இப்படம் இந்த மாதம் 21 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
 
படத்தின் அதிரடி சண்டைக் காட்சிகளும், சேஸிங் காட்சிகளும் கமர்ஷியல் ப்ரியர்களுக்கு விருந்தாக அமையும்.
 
தாரை தப்பட்டை
 
தாரை தப்பட்டையின் படப்பிடிப்பை முடித்து, டப்பிங்கை ஆரம்பித்துள்ளார் பாலா. படத்தை லைக்கா வாங்கியுள்ளது.
 
போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைவாக முடித்து இந்த வருட இறுதிக்குள்...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

தாரை தப்பட்டையை திரைக்கு கொண்டுவர உள்ளனர்.
 
தாரை தப்பட்டையின் ஸ்பெஷல், இளையராஜாவின் இசை. இது அவரது 1000 -வது படம். கரகாட்டக்கலையின் இன்னொரு பக்கத்தை பாலா உக்கிரமாக சொல்லியிருப்பார் என்ற நம்பிக்கை தாரை தப்பட்டையின் மேல் உள்ளது.
 
தூங்கா வனம்


 


கமலின் குறுகியகால தயாரிப்பு தூங்கா வனம். பிரெஞ்சில் வெளியான, ஸ்லீப்லெஸ் நைட் படத்தையே தூங்கா வனம் என்ற பெயாpல் ரீமேக் செய்திருக்கிறார். ட்ரெய்லரில் வரும் காட்சிகளும், அதனை படமாக்கிய விதமும், அச்சு அசலாக அப்படியே பிரெஞ்ச் படத்தை பிரதிபலிக்கிறது.
 
ஒரே இரவில் நடக்கும் அடிதடிதான் கதை. விறுவிறுப்புக்கு குறைவில்லை எனினும், காதல், சென்டிமெண்ட், காமெடி என்று பழக்கப்பட்ட ரசிகர்களுக்கு, ஆக்ஷனும், த்ரில்லும் மட்டும் திருப்தியை தருமா என்ற கேள்வியும் இருக்கிறது.
 
இறைவி
 
கார்த்திக் சுப்பாராஜின் இறைவி முடிந்து கேக்கும் வெட்டியிருக்கிறார்கள். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
 
டிசம்பரில் படத்தை வெளியிடுவதாக திட்டம். பீட்சா, ஜிகிர்தண்டா என இரு படங்களிலேயே ரசிகர்களின் விருப்ப இயக்குனராகிவிட்டார் கார்த்திக் சுப்பாராஜ்.
 
கதைக்களமும், மேக்கிங்கும் சிறப்பாக தமிழ் சினிமாவை முன்னெடுத்துச் செல்வது போல் இருக்கும் என்ற இவரது படங்கள் மீதான நம்பிக்கை இறைவியை முக்கியமானதாக்குகிறது.
 
அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா என நடிகர்கள் தேர்வும் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.
 
விசாரணை


 

 
தமிழ் சினிமாவை வெனிஸில் பிரதிநிதித்துவப்படுத்திய படம், வெற்றிமாறனின் விசாரணை.
 
தமிழ் சினிமாவின் காட்சி மொழியில் விசாரணை ஒரு பாய்ச்சலாக இருக்கும் என்ற, படம் பார்த்தவர்களின் விமர்சனத்தை வெனிஸில் கிடைத்த அங்கீகாரம் உறுதி செய்கிறது.
 
தமிழ் சினிமாவின் நாயகன் மனித உரிமை குறித்து சிறிதும் கவலைப்படாமல் என்கவுண்டரில் ஆள்களை படுகொலை செய்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், விசாரணைப் போன்ற நிஜத்தை பிரதிபலிக்கும், அதிகாரத்தின் வன்முறையை உரக்கச் சொல்லும் படங்கள் சமூகத்துக்கு விழிப்புணர்வாக அமையும்.
 
எல்லாவகையிலும், இந்த வருடம் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம், வெற்றிமாறனின் விசாரணை என்பதில் சந்தேகம் இல்லை.