வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. »
  3. ஜோ‌திட‌ம்
  4. »
  5. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By K.P.Vidhyadharan
Last Updated : சனி, 12 ஏப்ரல் 2014 (14:26 IST)

ஜய வருட ராசி பலன்கள் - விருச்சிகம்

அதிரடியாக செயல்பட்டு உடனடியாக தீர்வு காண்பதில் வல்லவர்களே! உங்களின் ராசிநாதனான செவ்வாய் லாப வீட்டில் இருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள்.

உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். இந்த ஜய வருடம் உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது பிறப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கனிவு பிறக்கும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். 
 
ஜூன் 12 வரை குருபகவான் 8ல் மறைந்து நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாய மடைவீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பலவருடங்கள் நெருக்கமாக பழகியவர்கள் கூட உங்களை குறை கூறுவார்கள். 
 
ஜூன் 13ந் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் நுழைவதால் திடீர் பணவரவு, யோகமெல்லாம் உண்டாகும். உங்களைப்பற்றிய இமேஜ் ஒருபடி உயரும். குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் குறையும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். மகளின் திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சொந்த-பந்தங்களின் சுயரூபம் அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.   
   
ஜூன் 20ந் தேதி வரை கேது உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் நிற்பதால் வேற்று மதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். கோயிலை புதுப்பிக்க நன்கொடை வழங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஜூன் 21ந் தேதி முதல் கேது ராசிக்கு 5ம் வீட்டில் நுழைவதால் பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். சிலர் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். உறவினர்களில் சிலர் உங்களை காரியம் ஆகும் வரை பயன்படுத்திக் கொண்டு விலகு கிறார்கள் என்று ஆதங்கப்படுவீர்கள். பூர்வீகச் சொத்தை அதிகம் செலவு செய்து சீர் செய்வீர்கள்.  
 
ஜூன் 20ந் தேதி வரை ராகு ராசிக்கு 12ம் வீட்டில் மறைந்திருப்பதால் பழைய பகை, கடனை நினைத்து கலங்குவீர்கள். அடுத்தவர்களின் குடும்ப விஷயத்தில் அத்துமீறித் தலையிட வேண்டாம். தாயாருக்கு கை, முழங்கால் வலி, சிறுசிறு அறுவை சிகிச்சை வந்துபோகும். எதிர்காலம் பற்றிய பயம் வரும். ஜூன் 21ந் தேதி முதல் ராகு லாப வீட்டில் நுழைவதால் எதிர்ப்புகள் விலகும். ஷேர் மூலம் பணம் வரும். வேற்று மொழி பேசுபவர்கள் நண்பர்களாவார்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். தடைப்பட்ட கல்யாணம் கூடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். சொந்த ஊரில் மதிப்பும் மரியாதையும் கூடும். கடன் பிரச்னைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். உங்களை ஏளனமாகவும், இழிவாகவும் பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். புது பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். சிலர் அயல்நாடு செல்வீர்கள்.  
 

டிசம்பர் 15 வரை ஏழரைச் சனியில் விரயச் சனி இருப்பதால் தூக்கம் குறையும். திடீர் பயணங்கள், வீண் அலைச்சல் இருக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களிடம் சொல்லி உங்கள் சுயமரியாதையைக் குறைத்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு நெருக்கமாக உள்ள முக்கியஸ்தர்களை யாருக்கும் பரிந்துரை செய்யாதீர்கள். திடீரென்று அறிமுகமாகும் நண்பரை நம்பி பெரிய முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம்.

முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். டிசம்பர் 16ந் தேதி முதல் உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்மச் சனியாக அமர்வதால் அதுமுதல் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். பெரிய நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். நெஞ்சு வலி, படபடப்பு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துபோகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். 
 
வியாபாரத்தில் அனுபவ அறிவால் லாபம் ஈட்டுவீர்கள். அதிரடியாக சில சலுகைகளை அறிவிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப புதுத் துறையில் முதலீடு செய்வீர்கள். செய்யும் தொழிலோடு இணையாக வேறொரு தொழிலையும் தொடங்கு வீர்கள். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். என்றாலும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கொடுக்கல்-வாங்கல் வைத்துக் கொள்ள வேண்டாம். சிலர் சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். கமிஷன், ரியல் எஸ்டேட், செங்கல் சூளை, ஸ்டேஷனரி, பதிப்பகம் வகைகளால் லாபமடைவீர்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உங்கள் கருத்திற்கு உடன்படும் நபரை பங்குதாரராக சேர்த்துக் கொள்வீர்கள். 
 

உத்தியோகத்தில் ஜூன் 12ம் தேதி வரை பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். ஜூன் 13ம் தேதி முதல் வேலைச்சுமை குறையும். உயரதிகாரி களின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். உங்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்கு தள்ளுபடியாகும். வெகுநாட்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல்போன பதவி உயர்வு கிட்டும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புது வாய்ப்புகள் தேடி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீர்கள். 
 
கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் வெளியாவதில் இருந்த தடைகள் நீங்கும். மக்களால் பாராட்டப்படுவீர்கள். உங்களின் புது முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றியடையும்.
 
மாணவ-மாணவியர்களே! படிப்பில் மதிப்பெண் கூடும். நண்பர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் சரியாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. உயர்கல்வி எதிர்பார்த்த கல்வி பிரிவில், எதிர்பார்த்த நிறுவனத்தில் கிடைக்கும்.  
 
கன்னிப் பெண்களே! நிஜம் எது, நிழல் என்பதை தெளிவாக உணர்வீர்கள். காதல் குழப்பங்கள் நீங்கும். உயர்கல்வியில் வெற்றி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். திருமணத் தடைகள் நீங்கும். 
 
இந்த ஜய வருடத்தின் முற்பகுதியில் புதுப்பது விஷயங்களில் முயற்சியையும் பிற்பகுதியில் வெற்றியையும் தருவதாக அமையும்.
 
பரிகாரம் :  பழநி தண்டாயுதபாணியை கந்த சஷ்டி கவசம் படித்து வணங்குங்கள். ஏழைப்பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.