வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

பிடித்துவைத்தால் பிள்ளையார் என்று கூறப்படுவதற்கான காரணம் என்ன...!

பிள்ளையார் மற்ற தெய்வங்களை போல் அல்லாமல் மிகவும் எளிமையானவர். பிள்ளையாரை மட்டும் சாலை ஓரங்களிலும், மரத்தடிகளிலும் கூட வைத்து  வழிபடுகிறோம்.
பிள்ளையாரை வழிபட களிமண்ணிலும், மஞ்சள் பொடியிலும், வெல்லத்திலும் கூட பிள்ளையார் பிடித்து வழிபட சாஸ்திரம் அனுமதிக்கிறது. அந்த அளவுக்கு எளிமையான சாமி பிள்ளையார்.
 
மற்ற தெவங்களை போல் பிரகாரத்தை சுற்றிக்கொண்டு போகவேண்டும் என்பதில்லை. நாம் போகும் வழியிலேகூட அவரை தலைநிமிர்ந்து பார்த்து வணங்கலாம். பிள்ளையார் வழிபாட்டுக்கென்றே சில அம்சங்கள் இருக்கின்றன. சிதறு தேங்காய் போடுவது. தலையில் குட்டிக் கொள்வது. இரணடு காதுகளையும்  பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடுவது ஆகியவை பில்ளையார் வழிபாட்டில் அடங்கியுள்ளன.
பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களை செய்யவேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. பிள்ளையாரை வழிபட மற்ற கிழமைகளில் மறந்துவிட்டாலும் வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி திதிகளில் மறக்காமல் வணங்கவேண்டும்.  விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம்.