கரூர்: ஜீவ சமாதி ஆலயத்தில் சங்காபிஷேகம் நிகழ்ச்சி

கரூரில் கண் சிமிட்டா மகான் ஸ்ரீ ல ஸ்ரீ ஒத்தைவேட்டி சுவாமிகள் ஜீவ சமாதி ஆலயத்தில் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் சங்காபிஷேகம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
கரூர் படிக்கட்டுத்துறை பகுதியில் வீற்றிருக்கும் கண் சிமிட்டா மகான் ஸ்ரீ ல ஸ்ரீ ஒத்தை வேட்டி சுவாமிகள் ஜீவ சமாதி ஆலயத்தில் 4-ம்  ஆண்டு குருபூஜை விழா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து உலக நன்மை வேண்டியும், மழைவேண்டியும் மஹா 
சங்காபிஷேக நிகழ்ச்சியும், ஜீவ சமாதியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதருக்கு மகா அபிஷேகம் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக சிறப்பு யாகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளாமானோர் கலந்து கொண்டு ஒத்தை வேட்டிசித்தர் அருள் பெற்றனர்.

 


இதில் மேலும் படிக்கவும் :