வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவினையொட்டி திருத்தேரோட்டம்

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவினையொட்டி திருத்தேரோட்டம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது!
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடிக்க தேரோட்டம் நடந்தது. கரூர், மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 12ல், பாலம்மாள்புரத்திலிருந்து கம்பம் எடுத்து வந்து நடப்பட்டது. அதன்  பின், 17ல் பூச்சொரிதல், 19ல் காப்புக் கட்டப்பட்டது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளிய தேரை, பக்தர்கள் வடம்  பிடித்து இழுக்க, தேரோட்டம் நடந்தது. 
 
முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர், 9:00 மணிக்கு நிலை சேர்ந்தது. விழாவை முன்னிட்டு, காலை, 3:00 மணியிலிருந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமராவதி ஆற்றில் நீராடி, அலகு குத்தி, அக்னிச்சட்டி எடுத்து வந்தனர். குழந்தைகளை கரும்புத் தொட்டிலில் இட்டு எடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து பறவைக் காவடி, அலகு குத்துதல், மாவிளக்கு எடுத்தல் போன்றவை நடக்கவுள்ளன. 

நாளை மாலை, கோவிலிருந்து கம்பம் எடுத்து, அமராவதி ஆற்றில் விடும் விழாவிற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.