வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சித்தர்கள் பெற்ற அட்டமாசித்திகள் எவை ....?

அணிமா: பெரிய ஒரு பொருளைத் தோற்றத்தில் சிறியதாக ஆக்குவது, பிருங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்னும் புராணச் செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.
லகிமா: கனமான பொருளை லேசான பொருளாக ஆக்குவது, திருநாவுக்கரசரை, சமயம் பகை காரணமாக கல்லில் கட்டி கடலிட்ட போது, கல்  மிதவையாகி உடல் மிதந்தது. லகிமா என்னும் சித்தமாகும்.
 
மகிமா: சிறிய பொருளை பெரிய பொருளாக ஆக்குவது வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூன்று உலகங்களை அளந்தும்,  கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கும் உயர்ந்த வடிவம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மகிமா என்னும் சித்தமாகும்.
 
கரிமா: லேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது. அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்த போது  ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடம் உள்ள எல்லாப் பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன்  மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்திகரிமா.
 
பிராத்தி: எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது திருவிளையாடல் புராணத்தில் எல்லாம் வல்ல சித்தரான படலம் என்னும் பகுதியில்  சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் சாட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.
 
பிரகாமியம்: வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல் அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப்  பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண் வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.
 
ஈசத்துவம்: ஐந்து தொழில்களை நடத்துதல் திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் சித்தாகும்.
 
வசித்துவம்: ஏழு வகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நகர, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியனவற்றைத் தம் வசப்படுத்துதல் திருநாவுகரசர் தன்னைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும் ராமர் ஆல மரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின்  ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் என்னும் சித்தாகும்.