1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2016 (17:33 IST)

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் : மிதுனம்

தொலைநோக்குச் சிந்தனை உள்ளவர்களே! உங்கள் ராசிநாதன் புதனும், யோகாதிபதியான சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பழைய நண்பர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும்.
 
ராகு 3-ம் இடத்திலும், சனி 6-ம் வீட்டிலும் நீடிப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு அயல்நாட்டில் வேலை அமையும். வேற்றுமாநிலத்தை சார்ந்தவர்கள், மாற்றுமொழியினரால் ஆதாயம் உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். 16-ஆம் தேதி வரை 2-ல் சூரியன் நிற்பதால் காரசாரமாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். பல் வலி, காது வலி வந்துப் போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.
 
17-ஆம் தேதி முதல் சூரியன் ஆட்சிப் பெற்று அமர்வதால் அரசால் அனுகூலம் உண்டு. அரசியலில் செல்வாக்குக் கூடும். வெளிவட்டாரத்தில் மரியாதைக் கூடும். 9-ம் இடத்தில் கேது தொடர்வதால் தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். அவருக்கு மனஉளைச்சல், இரத்த அழுத்தம், மூட்டு வலி வந்துப் போகும்.
 
3-ல் மறைந்துக் கொண்டு உங்களுடைய முயற்சிகளை முடக்கிக் கொண்டிருக்கும் குரு 2-ஆம் தேதி முதல் 4-ம் இடத்தில் நுழைவதால் எதையும் திட்டமிட்டு செய்வீர்கள். ஆனால் தாயாருடன் மோதல்கள் வரும். அவருக்கு தலைச்சுற்றல், நெஞ்சு வலி, வயிற்று வலி, ஹார்மோன் பிரச்னைகள் வந்துப் போகும்.
 
கன்னிப் பெண்களே! காதல் குழப்பங்கள் தீரும். பெற்றோரின் அரவணைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். சந்தை ரகசியங்களைத் தெரிந்துக் கொள்வீர்கள். வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். உத்யோகத்தில் தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலிடத்திற்கு தெரிவித்துக் கொண்டிருக்காதீர்கள். மூத்த அதிகாரிகளை அனுசரித்துப் போவது நல்லது. கலைத்துறையினரே! சம்பள பாக்கி கைக்கு வரும். மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். வளைந்துக் கொடுத்து வெற்றி பெறும் மாதமிது.