வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2016 (18:11 IST)

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் : மகரம்

எல்லோரையும் மதிக்கும் குணம் கொண்டவர்களே! ராசிநாதன் சனியும், செவ்வாயும் லாப வீட்டில் நிற்பதால் நினைத்தது நிறைவேறும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். திடீர் பயணங்களால் செலவினங்கள் கூடும். வெளிநாட்டில், வேற்றுமாநிலத்தில் இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும். வீடு மாறுவது என முடிவெடுப்பீர்கள்.
 
உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 2-ஆம் தேதி முதல் குருபகவான் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால் தடைப்பட்டு, தள்ளிப் போன காரியங்களை முடிப்பீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறும். விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். அவருடனான மோதல்களும் விலகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.
 
16-ஆம் தேதி வரை சூரியன் 7-ம் வீட்டில் நிற்பதால் மனைவிக்கு அடிவயிற்றில் வலி, முதுகு வலி, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். மனைவி அடிக்கடி கோபப்படுவார். சில நேரங்களில் உங்களின் குற்றம், குறைகளை பட்டியலிட்டுக் கொண்டிருப்பார் அதையெல்லாம் பெரிதுப்படுத்திக் கொள்ளாதீர்கள். ஈகோ பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் மோதல்கள் வரக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
 
ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். நெருங்கிப் பழகிய ஒரு சிலர் திடீரென்று பார்த்தும் பார்க்காமலும் செல்வார்கள். அதைக் கண்டு பதைபதைக்காதீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் மனத்தாங்கல் வரும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம்.
 
கன்னிப் பெண்களே! காதல் கனியும். கல்யாண விஷயமும் சாதகமாகும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். சந்தை நிலவரத்திற்கேற்ப சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பங்குதாரர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் குறையும். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலமாக உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்யோகத்தில் அதிகாரிகள் இனி உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. கலைத்துறையினரே! கிசுகிசுத் தொல்லைகள் நீங்கும். புது வாய்ப்புகள் வரும். திடீர் திருப்பங்களும், யோகங்களும் நிறைந்த மாதமிது.